நூல் வகையால்-அடையத்தக்க மெய்ப்பொருளை உணரும் உணர்வைத் தருகின்ற நூன்முறை வாயிலாக வழங்கு தேன்-உன் அடியார்க்கு நீ வழங்குகின்ற திருவருளாகிய தேனை, ‘‘பொழியும்’’ என்றது இறந்தகாலத்தில் நிகழ்காலம். இதனால், இவர்க்கு இறைவன் ஆசிரியனாய் வந்து அருள் புரிந்தமை பெறப்படும். (ஒளிக் குன்று) என இயையும். மணிக் குன்று-மாணிக்க மலை. ‘உள்ளமும்’ என உம்மை விரித்து, ‘முகத்தலை அமர்ந்து, எனதும் உள்ளத்தும் ஆயினை’ என உரைக்க. ஆயினை-பொருந்தினாய். ‘இதற்கு யான் செய்யும் கைம்மாறு என்’ எனக் குறிப்பெச்சம் வருவித்து முடிக்க. 114. ‘கல் உள்ளம்’ என இயையும். நகுதல்-மகிழ்தல்; அஃது இங்கு அன்பு செய்தலைக் குறித்தது. இது பொதுவாக உள்ளத்தின் இயற்கையைக் கூறியது, ‘நெகா உள்ளம்’ எனவும் பாடம் ஓதுப. ‘‘கசிவு’’ என்றது அன்பினை, ‘‘நின்கட் கசிவிலேன்’’ என்றது, சிறப்பாக இறைவனிடத்து அன்பு செய்யாமையைக் கூறியது ‘‘ஒழி’’ என்றது, துணிவுப் பொருண்மை யுணர்த்த, ‘‘நகாவொழியேன்’’ என்றது ஒரு சொல்தன்மைப்பட்டு நின்று, ‘நகமாட்டேன்’ எனப் பொருள் தந்தது. நகமாட்டாமையாவது, மகிழ்ந்து நின்று பாடுதல், ஆடுதல் முதலியவற்றைச் செய்யாமை. ‘‘ஆவி’’ என்றது, உயிரின் உணர்வை உள்-உள்ளிடத்தில் ஏழை-அறிவில்லாதவன். நாயடியேன்-நாய்போலும் அடியேன். ஓகார ஏகாரங்களை மாற்றி, ‘அடியேற்கு எளிமையே உனக்குப் |