எண்ணும்மை விரிக்க. ‘என்னிடை விளைந்த’ எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். கலாம்-பூசல்; இதளை இக்காலத்தார், ‘கலகம்’ என்பர். ஆள் ஆண்ட-ஆளாக ஆண்ட. பக்கல், ஏழன் உருபு, ‘வாயால் மொழிந்து’ என உருபு விரிக்க. மொழிந்து-மெய்ப் பொருளைக் கூறி ; உபதேசித்து, இறைவன் ஆசிரியனாய் வந்து அருள்செய்த குறிப்பு இதனுள்ளும் காணப்படுதல் காண்க. 117. மண்டு அழல் வெதும்பி - மிக்க தீயால் வெந்தபின்பு. வினைபடு-தொழில் பொருந்திய, ‘‘நிறை’’ என்னும் முதனிலைத் தொழிற்பெயர் ஆகுபெயராய், நிறைதற் கருவியை உணர்த்திற்று. நிறைதற்கருவி, நீர் நிறைந்து நிற்றற்கு ஏதுவாகிய சால். ‘மண்டு அழல்வெதும்பிய பின்னர்ப் பூம்புனல் பொழிந்து நிற்பது’ என்றதனால், புனல் பட உருகுதல். அங்ஙனம் வெதும்புதற்கு முன்னராயிற்று. ‘‘அழலில் வெதும்புதற்கு முன்னே புனல் சிறிதுபடினும் குழைந்துபோவதாகிய நீர்ச் சால், அழலில் வெதும்பிய பின்னர்ப் புனலை நிறையக் கொண்டும் நிலைத்துநின்று உயிர்களைக் காப்பாற்றுவதுபோல, நீ என் மனத்தில் வேதகத்தைப் போல வருதற்குமுன்பு இவ்வுலகத்தைச் சிறிது பற்றினும் என் மனம் அதனுள் அகப்பட்டு மீளமாட்டாது மயங்கி உன்னை நினைத்தற்கு உதவவில்லை. நீ வந்தபின் அதனை நிரம்பப் பற்றினும் அதனுள் அகப்படாது நின்று உன்னை நான் எப்பொழுதும் நினைத்தற்குத் துணையாய் நிற்கின்றது’ என்னும் |