இனி, இவ்வாசிரியர் காயகற்பம் பெற்றுப் பன்னாள் வாழ்ந்தார் எனச் சொல்லப்படுதலால், அதனையே குறித்து, ‘‘நிலைபெற்ற கருவூரன்’’ என்றார் என, இதனை, அவருக்கே அடையாக்கி உரைத்ததும் ஆம். இப்பொருட்கு, முதலடியிற் சொல்லப்பட்ட காரணம், இவர் நிலைபெற்றமைக்கு உரிய காரணமேயாம். ‘தமிழ்மாலை பகரவரும்’ என்பதும் பாடம். ‘இத் தமிழ்மாலையின் பாடல்பத்தினையும் காந்தாரப் பண்ணினால் பாடி இறைவனைப் போற்றுவோர் பூரணத்தாராவர்’ என்க. ‘பூரணத்தால்’ என்பது பாடம் அன்று. சீர் அணைத்த - அழகைத் தன்னிடத்தே கொண்ட.
மல்குபுகழ் நடராசன் வளர்கோயி லகலாது பல்கிளைஞ ருடனுரிமைப் பணிசெய்யும் பரிவினராய்க் கல்விகளின் மிகுமெல்லைக் கருத்தினராய் நிருத்தனருட் செல்வமலி யகம்படிமைத் திறலினர்தம் பதம் போற்றி. 13 மண்ணிலிரு வினைக்குடலாய் வானிரயத் துயர்க்குடலா யெண்ணிலுட லொழியமுய லிருந்தவத்தா லெழிற்றில்லைப் புண்ணியமன் றினிலாடும் போதுசெய்யா நடங்காண நண்ணுமுட லிதுவன்றோ நமக்குடலாய் நயந்தவுடல். 14 மறந்தாலு மினியிங்கு வாரோமென் றகல்பவர்போற் சிறந்தார் நடமாடுந் திருவாளன் றிருவடிகண் டிறந்தார்கள் பிறவாத விதிலென்ன பயன்வந்து பிறந்தாலு மிறவாத பேரின்பம் பெறலாமால். 15 காதமருங் கொடுங்குழையான் காத்தமருங் கொடுங்குழையான் பாதமுற வளைந்திரவும் பகலுமுற வளைந்திரவும் பேதமற வுடன்றீரும் பிணிபிறவி யுடன்றீரு மோதலுறு மருந்தில்லை யொழியவொரு மருந்தில்லை. 16 பொன்றிகழ் பங்கயமூழ்கிப் புனிதனபங் கயமூழ்கிச் சென்றுதொழக் கருத்துடையார் சிலரொழியக் கருத்துடையா ரொன்றுமுளத் திருக்கூத்தை யுருவொழிக்குந் திருக்கூத்தை மன்றமரப் பணியீரேல் மருவுமரப் பணியீரே. 17 -கோயிற் புராணம். |