பக்கம் எண் :

திருமுறை]13. கங்கைகொண்ட சோளேச்சரம்95


143.

மங்கையோ டிருந்தே யோகுசெய் வானை
   வளர்இளந் திங்களை முடிமேற்
கங்கையோ டணியுங் கடவுளைக் கங்கை
   கொண்டசோ ளேச்சரத் தானை
அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்
   அறைந்தசொல் மாலையால் ஆழிச்
செங்கையோ டுலகில் அரசுவீற் றிருந்து
   திளைப்பதும் சிவனருட் கடலே.                (11)
 

திருச்சிற்றம்பலம்


என்றதில்.     ‘‘கொண்டு’’ என்றது, ‘எடுத்து’ என்றவாறு.   ‘மருங்கிற்
கொடியிடை‘ என இயையும். ‘பக்கத்தில் இருக்கும் உமாதேவி’ என்பது
பொருளாம். ‘‘கொங்கை  கொண்டு’’ ‘‘கங்கை கொண்டு’’ என்றவற்றில்,
‘‘கொண்டு’’     என்றவை,     ‘தாங்கி’     என்னும்   பொருளன.
அனுங்கும்-மெலிகின்ற (இடை என்க). ‘‘கொடியள்’’ என்றதில், ‘ஆவள்’
என்னும்  ஆக்கம்  விரிக்க.  ‘கொடியளாவள்’ என்றது, ‘வெகுள்வாள்’
என்றவாறு.  ‘உமாதேவி   காணின்  வெகுள்வாள்  என்று  கருதியே
சிவபிரான்  கங்கையைச் சடையில் மறைத்து வைத்துள்ளான்’ என்றது,
தற்குறிப்பேற்ற அணி.

143.  யோகு-யோகம். ‘‘மங்கையோடு இருந்தே யோகம் செய்வான்’’
என்றது, ‘ஒன்றிலும் தோய்விலனாய், ஒன்றொடொன் றொவ்வா வேடம்
ஒருவனே   தரித்துக்கொண்டு   நிற்பான்’ (சிவஞான  சித்தி  சூ.1.51.)
என்றதாம்.    ‘‘நேரிழையைக்    கலந்திருந்தே   புலன்கள்  ஐந்தும்
வென்றானை’’     என்ற     அப்பர்     திருமொழியைக்   காண்க
(திருமுறை-6-50.3)  இவ்வாசிரியர்,  தம்மை, அங்கை ஓடு ஏந்திப் பலி
திரிபவராகக்  கூறினமையின்,  நிறைந்த  துறவர்  என்பது விளங்கும்.
ஆழி-ஆணைச்    சக்கரம்.   ‘திளைப்பதும்   சிவன்   அருட்கடல்’
என்றாராயினும்,   ‘சிவனது   அருட்கடலிலும்   திளைப்பர்  என்றல்
கருத்தென்க.    ‘அரசு    வீற்றிருத்தல்    இப்பிறப்பிலும்,  சிவனது
அருட்கடலில்  திளைத்தல்  இப்பிறப்பு  நீங்கிய  பின்னரும் என்பது
ஆற்றலாற் கொள்ளக் கிடந்தது.