பக்கம் எண் :

110கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்



 

மற்றெனக் குறவென் ! மறிதிரை வடவாற்
   றிடுபுனல் மதகில்வாழ் முதலை
எற்றுநீர்க் கிடங்கின் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.                   (2)
 

164.

சடைகெழு மகுடம் தண்ணிலா விரிய
   வெண்ணிலா விரிதரு தரளக்
குடைநிழல் விடைமேற் கொண்டுலாப் போதும்
   குறிப்பெனோ  ?  கோங்கிண  ரனைய 
குடைகெழு  நிருபர்  முடியொடு முடிதேய்ந்
   துக்கசெஞ் சுடர்ப்படு குவையோங்
கிடைகெழு மாடத் திஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.                   (3)
 

போந்தன     இல்லை-புறத்துச்   செல்லவில்லை.    ‘இங்ஙனமாகலின்
எனக்கு  மற்று  உறவு  என்’  என்க.  ‘வடவாறு’ என்பது தஞ்சாவூரின்
வடக்குப்புறத்தில்  ஓடும் ஓர் யாறு.   இடு-அதன் கண் அமைக்கப்பட்ட.
புனல்  மதகு-நீரையுடைய  வாய்க்கால்   தலைமதகு.  ‘நீர்  சூழ்’ என
இயையும்,  கிடங்கில்-அகழிபோல.  ‘‘இவர்க்கு’’   என்பது, முன் உள்ள
‘அகலா,   புகுந்தன,  போந்தன  வில்லை’   என்பவற்றோடு  முடியும்.
நான்கனுருபு,   ‘இவற்கு   இஃது  இயல்பு’   என்றல்போலப்  பண்புத்
தற்கிழமைக்கண் வந்தது.

164.    ‘மகுடத்தின்கண்’ என உருபு விரிக்க. ‘வெண்ணிலா விரிதரு
குடை’  என்க.  தரளத்தால் வெண்ணிலா விரிவதாயிற்று. தரளம்-முத்து.
குறிப்பு-கருத்து.   ‘‘குறிப்பென்னோ’’  என்றது,  ‘மாதர் உள்ளங்களைக்
கவர்வதுபோலும்’          என்னும்     குறிப்புடையது.     கோங்கு
இணர்-கோங்கம்பூக்கொத்து  ;   இது  குடைக்கு வடிவுவமை. துணியால்
ஆக்கப்பட்ட     குடைக்கு       இவ்வுவமை     பொருந்துவதாகும்.
தேய்ந்து-தேய்தலால்.  உக்க-உதிர்ந்த.    ’உக்க  குவை’ என இயையும்.
‘‘செஞ்சுடர்ப்படு  குவை’’  என்றதனால்,   ‘மாணிக்கக்  குவை’ என்பது
தோன்றிற்று.    படு-உண்டாகின்ற.    குவை    ஓங்கு    இடைகெழு
மாடம்-குவியல்கள்   மிக்கிருக்கின்ற   இடத்திற்  பொருந்திய   மாடம்.
இடம்,  வீதி.  ‘இடைகழி  மாடம்   என்பதும்  பாடம். ‘மாடத் தஞ்சை’
என்க. இப்பாட்டு, காதல் நோய் கொண்டாள் கூற்றாய் அமைந்தது.