பக்கம் எண் :

112கருவூர்த் தேவர் திருவிசைப்பா[ஒன்பதாந்


உவரிமா கடலின் ஒலிசெய்மா மறுகில்
   உறுகளிற் றரசின தீட்டம்
இவருமால் வரைசெய் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே.                   (5)

 

167.

அருளுமா றருளி ஆளுமா றாள
   அடிகள்தம் அழகிய விழியும்
குருளும்வார் காதும் காட்டியான் பெற்ற
   குயிலினை மயல்செய்வ தழகோ !
தரளவான் குன்றில் தண்ணிலா ஒளியும்
   தருகுவால் பெருகுவான் தெருவில்
இருளெலாங் கிழியும் இஞ்சிசூழ் தஞ்சை
   இராசரா சேச்சரத் திவர்க்கே
 

அளவறியப்படாத.     அளவறியப்படாமையை    வெளிப்படுத்தினோர்
அயனும்,     மாலுமாயினும்    அறியமாட்டாமை     அனைவர்க்கும்
பொதுவாதல்    பற்றி,    அவ்விருவரோடு,    ஏனைய    பலரையும்
உளப்படுத்துக்  கூறினார். பெருமை,  அடி பாதலத்தைக் கடந்தும், முடி
அண்டங்கள்       எல்லாவற்றையும்        கடந்தும்     நின்றமை.
‘பெருமையையுடைய  தழல்’  என்க.   அடல்-அடுதல்  ;  வருத்துதல்.
‘வருத்துதலையுடைய   அழல்’     என்க.  அழல்-வெப்பம்,  பிழம்பர்,
‘பிழம்பு’        என்பதன்         போலி.         பிழம்பு-வடிவம்.
உவரி-உவர்ப்புடையதாகிய.   ‘‘அரசு’’ என்றது பன்மை குறித்து நின்றது.
‘மா மறுகில் உறு களிற்றினது  ஈட்டம் மாகடலின் ஒலிசெய்’ என மாற்றி
அதனையும்.  ‘‘இஞ்சி  சூழ்’’   என்பதனையும், ‘தஞ்சை’ என்பதனோடு
தனித்தனி  முடிக்க.   இவரும்-உயர்ந்த.  ‘‘மால்வரை  செய்’’ என்றதில்
உள்ள செய், உவம உருபு. ‘இவர்க்குப் பிழம்பர் தழல்’ என முடிக்க.

167.     அடிகள்-  (யாவர்க்கும்) தலைவர்.  ‘அடிகளாகியதம்’ என
உரைக்க.   குருள்-சுருள்;   சடைமுடி.   ‘‘அழகோ’’  ஓகாரம்  சிறப்பு;
எதிர்மறையாயின்,  ‘ஆளா  அடிகள்’   என்பது பாடமாதல் வேண்டும்.
தரள  வான்குன்றில்-முத்தினாலாகிய   பெரிய  மலைபோல. ‘‘ஒளியும்’’
என்ற  உம்மை  சிறப்பு. குவால். (மாடங்களின்) திரட்சி.  ‘மாடங்களின்’
என்பது  ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது.  இருளெலாம்-இருள் முழுதும்,
‘கிழியும் தஞ்சை’ என இயைக்க.