பக்கம் எண் :

திருமுறை]20. கோயில்133


மூவா யிரவர் தங்க ளோடு
   முன்னரங் கேறிநின்ற
கோவே உன்றன் கூத்துக் காணக்
   கூடுவ தென்றுகொலோ !                      (2)
 

197.

முத்தீ யாளர் நான்ம றையர்
   மூவா யிரவர்நின்னோ
டொத்தே வாழுந் தன்மை யாளர்
   ஓதிய நான்மறையைத்
தெத்தே யென்று வண்டு பாடுந்
   தென்றில்லை யம்பலத்துள்
அத்தாவுன்றன் ஆடல் காண
   அணைவதும் என்றுகொலோ !                 (3)
 

198.

மானைப் புரையும் மடமென் னோக்கி
   மாமலை யாளோடும்
ஆனஞ் சாடுஞ் சென்னி மேல்ஓர்
   அம்புலி சூடும் அரன்
 

பொருளையும்,     ஒழுக்கத்தையும்      அறிதற்குக்     கருவியாகும்.
ஆவேபடுப்பார்-பசுக்களின்   நெய்.   பால்,  தயிர்களை   மிகுதியாகச்
சொரிவர். அரங்கு-அம்பலம்.

197.     ‘இரணிய  வன்மன்’  என்னும்  அரசன்,    வியாக்கிரபாத
முனிவருடைய   கட்டளையின்படியே,   ‘கங்கை   யமுனை’  என்னும்
இருநதிகளின்  இடையேயிருந்த  முனிவர் மூவாயிரவரைத்  தில்லைக்கு
அழைத்து  வந்து எண்ணிக்காட்டிய பொழுது, ஒருவர்   குறைய அவன்
திகைத்து   வருந்துதலும்,   தில்லைக்  கூத்தப்பெருமான்,    ‘இவர்கள்
எம்மையொப்பார்கள்;   நாமும்   அவர்களை   யொப்போம்;    நாம்
அவர்களில்   ஒருவரானோம்;  வருந்தற்க’  என்று   அருளிச்செய்தார்
என்பது  தில்லை  மூவாயிரவரைப்பற்றிய வரலாறு ஆதலின்,  அவரை,
‘‘நின்னோடு ஒத்தே வாழும் தன்மையாளர்’’ என்றார்.  இவ்வரலாற்றைக்
கோயிற்  புராணத்தால்  அறிக. ‘தில்லைவாழந்தணர்  ஓதுகின்ற நான்கு
வேதங்களை வண்டுகள் பாடும்’ என்றவாறு.

198.     ஆன் அஞ்சு-பஞ்ச கௌவியம். ‘‘ஆவினுக்    கருங்கலம்
அரன்அஞ்   சாடுதல்’’   என்ற   அப்பர்  திருமொழியைக்   காண்க.
‘ஆனைஞ்சு’ எனவும் பாடம் ஓதுவர். அம்புலி-சந்திரன்