பக்கம் எண் :

150திருவாலியமுதனார் திருவிசைப்பா[ஒன்பதாந்


225.

தூவி நீரொடு பூவ வைதொழு
   தேத்து கையின ராகி மிக்கதோர்
ஆவி யுள்நிறுத்தி யமர்ந்
   தூறிய அன்பினராய்த்
தேவர்தாந் தொழ ஆடிய தில்லைக்
   கூத்த னைத்திரு வாலி சொல்லிவை
மேவ வல்லவர்கள் விடை
   யான்அடி மேவுவரே.                         (11)
 

திருச்சிற்றம்பலம்
 


225.   ‘நீரொடு பூஅவை தூவி’ என மாற்றுக.  ஆவி-பிராண வாயு.
அமர்ந்து-விரும்பி.  ஊறிய அன்பு-சுரந்த அன்பு.  ‘சுரக்கின்ற என்னும்
நிகழ்காலம்   இறந்த   காலமாகச்   சொல்லப்பட்டது.  மேவ-விரும்ப;
என்றது.  ‘விரும்பிப்  பாட’  என்றவாறு.   மேவுவர்-சேர்வர். இதனுள்,
‘அமர்ந்து,விடை’ என்பன கூன்.


எத்தகைய போகங்க ளெவற்றினுக்குங் காரணமா
வைத்தபடி யிடம்போதா வகைநெருங்கு மன்னுயிர்கண்
முத்திபெறத் திருவுள்ள முகிழ்த்தபெருங் கருணையினா
லத்தனுமித் தலநண்ணி யலகிலிடங் கைக்கொண்டான்.            7

ஞாலத்தா யிரகோடி நற்றான முளவவற்றி
னேலத்தா னலமார விடங்கொண்ட வெழிற்றில்லை
மூலத்தா னத்தொளியாய் முளைத்தெழுந்த சிவலிங்கக்
கோலத்தா னின்பூசை கொள்வானென் றுரைசெய்து.              8

திருநீறு நுதல்சேர்த்தித் திகழுச்சி தனைமோந்தெங்
கருநீறு படவுதித்த காளையென வணைத்துவிழி
தருநீர்மத் தியந்தினனாந் தந்தையைவந் தனைசெய்து
வெருநீர்மை யன்னையையு மடிபணிந்து விடைகொண்டான்.        9

                                        ---கோயிற் புராணம்.