சந்திரன்’ என உரைக்க. கொத்து ஆர்-கொத்தாகப் பொருந்திய. கொத்து, பூங்கொத்துமாம். குழகன்-அழகன். 243. அதிர்த்த-ஆரவாரம் செய்த; (உமையை) ‘அஞ்சப் பண்ணிய’ என்றுமாம். அரக்கன்-இராவணன். அடர்த்தாய்- துன்புறுத்தினவனே. உதித்த போழ்தில் விளங்கும் இரவி’ என ஒருசொல் வருவிக்க. ‘மணி, மாணிக்கம்’ என்பது வெளிப்படை, தலம்-நிலம். 244. அமரர் பதி-தேவர்கள் தலைவன்; இந்திரன், ஆலம்-நஞ்சு. ’ஆலா கண்டா’ எனப் பாடம் ஓதி, ‘ஆலால’ என்பது குறைந்து நின்றதாக உரைப்பினும் இழுக்கில்லை. ‘‘அவர்’’ என மீட்டும் கூறியது, அவரது பெருமை குறித்து. ‘‘மல்கு சிற்றம்பலம்’’ என்பது முன்னும் வந்தது (6). பால் ஆடும்-சுற்றிலும் சுழன்றாடுகின்ற. ‘பாலாடும் சடை’ என இயையும். ‘பாலாடும் முடி’ என்று இயைத்து, ‘பாலில் மூழ்குகின்ற சென்னி’ எனவும் உரைப்பர். தாழ-நீண்டு விளங்க. |