பக்கம் எண் :

திருமுறை]25. கோயில்169


தேச மிகுபுகழோர் தில்லை
   மாநகர்ச் சிற்றம்பலத்
தீசனை எவ்வுயிர்க்கும் எம்
   இறைவன்என் றேத்துவனே.                    (9)
 

256.

இறைவனை ஏத்துகின்ற இளை
   யாள்மொழி யின்தமிழால்
மறைவல நாவலர்கள் மகிழ்ந்
   தேத்துசிற் றம்பலத்தை
அறைசெந்நெல் வான்கரும்பின் அணி
   ஆலைகள் சூழ்மயிலை
மறைவல வாலிசொல்லை மகிழ்ந்
   தேத்துக வான்எளிதே.                        (10)
 

திருச்சிற்றம்பலம்
 


என்று     ஏத்துவன்’   என்றது,   ‘அவனது    பெருமை   யறிந்து
காதலித்தேன்’  என்றவாறு.  ‘இனி அவனைத்  தலைப்படுதல் என்றோ’
என்பது குறிப்பெச்சம். இறைவன்-தலைவன்.

256.     ‘‘ஏத்துகின்ற’’ என்றது, ‘காதலித்துத் துதிக்கின்ற,  என்னும்
பொருட்டு. ‘இளையாள் மொழியாகிய (கூற்றாகிய) இனிய  தமிழால்’என
உரைக்க.   ‘‘மறைவல’’   என்றது  பொருளுணர்தல்   வன்மையையும்,
‘‘நாவலர்கள்’  என்றது,  ஒலி பிறழாது ஓதுதல் வன்மையையும் குறித்து
நின்றன.  அறை-வரம்பால்  வரையறுக்கப்பட்ட  வயல்கள்.  ‘வயல்கள்
செந்நெற்பயிர்களோடும்,  கரும்பின்  ஆலைகளோடும் சூழும் மயிலை’
என்க. அணி-வரிசை. மயிலை-மயிலாடு துறை (மாயூரம்).