பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை584

வெண்பா

826.

செய்ய திருமேனிச் சிற்றம் பலவருக்(கு) என்
தையல் வளைகொடுத்தல் சாலுமே; - ஐயன்தேர்
சேயே வருமளவில் சிந்தாத மாத்திரமே
தாயே! நமதுகையில் சங்கு.

17


ஆசை. கோள்மீன் - முதலை. அலமந்து - பல திசையாகச் சூழ்ந்து சூழ்ந்து. அலைக்கும் - மனத்தைக் கவற்றுகின்ற. துயர்த்திரை - துன்பமாகிய அலைகளின் உவட்டு - மோதல்கள். பெயர்ப்பு இடம் அயர்த்து - பெயர்ந்து அடைய வேண்டிய இடத்தை மறந்து. அடைய வேண்டிய இடம் வீடு. கல் -பாறை ‘கல்லில் வீழப்பண்ணி’ என்க. நிறை - மனம் ஒருநெறியில் நிற்றல். கூம்பு - பாய்கள் கட்டப்படும் தூண். கீறி - கிழிக்க்ப்பட்டு. ‘கீறிக் கவிழாமுன்னம்’ என இயைக்க. மாயப் பெயர்ப் படுகாயம் -பொய்யாய் இருந்தும், ‘மெய்’ என வஞ்சனையான பெயரோடு பொருந்திய உடம்பு. சிறைக் கலம் - உண்மையில் சிறையாய், தோற்றத்தில் கரைசேர்ப்பதுபோலக் காணப்படுகின்ற. மரக்கலம். கலங்குபு - நிலைகலங்கி. அலங்கல்கொன்றை மலை. வம்பு அலர் - நறுமணத்துடன் மலர்கின்றதார் - கயிறு. நடுக்கடலில் கவிழும் நிலையில் உள்ள மரக்கலங்களைத் தரையில் நாட்டப்பட்டுள்ள தூணில் பிணிக்கப் பட்டுள்ள கயிற்றைக் கொண்டுபோய்க் கட்டியீர்த்துக் கரைக்குக் கொணர்வது அக்கால வழக்கம்.இப்பாடலில் அமைந்துள்ள முற்றுருவகத்தின் சிறப்புஅறிந்து மகிழத்தக்கது. ‘இவ்வுடம்பு வீழ்வதற்குள்உயிர் உன் திருவடியை அணைதலாகிய சீவன் முத்தி நிலையைத் தந்தருளல் வேண்டும்’ என்பதாம். ‘அங்ஙனம் அடையா தேஉடம்பு வீழுமாயின், அடுத்த பிறப்பில் செல்ல வேண்டிவரும்’ என்பது கருத்து.

826. குறிப்புரை: நற்றாய்க்கு மகளாயினாளை அவளோடு தனக்குள்ள கேண்மை பற்றி, “என்தையல்” என்றார். சாலும் - பொருந்தும். இதன்பின் ‘ஏனெனில்’ என்பது வருவிக்க. ஐயன் - சிற்றம்பலத்தான். சேயே - தொலைவில்தானே. ஏகாரம் பிரிநிலை. மகளைப் பெற்ற நற்றாய்க்குத் தோழியே மகளுக்குச் செவிலித்தாய் ஆதலாலும். தோழி தலைவியை, ‘அன்னாய்’ என்றல் வழக்கு ஆதலாலும் “தாயே” என்றாள், “நமது கையில்உள்ள சங்கு சிந்தாத மாத்திரமே” என்றதனால். ‘சிந்துநிலையை அடைந்து விட்டன’ என்றதாம். ‘உலர்ப்புறத்துத் தலைவனைக் காதலித்தாராகக் கூறப்படும் மகளிர் பொதுமகளிரே யல்லது, குல மகளிரல்லர் என்பதை.

“வழக்கொடு சிவணிய வகை யான” என்னும் சூத்திரத்திற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையன் உணர்க. அங்ஙனம் ஆதலின்