பக்கம் எண் :

பதினொன்றாந் திருமுறை960

வேறு

1348.அயன்நெடிய மாலுமவ ரறிவரிய தாணுவரன்

அருளினொடு நீடவனி யிடர்முழுது போயகல,

வயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி

மழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனக

செயநிலவு மாடம்மதில் புடை தழுவு வாசமலி

செறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர்

பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்

பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே.

24

எண்சீர்க்கழிநெடிற் சந்த விருத்தம்

1349.அரியாருங் கிரிநெறியெங் ஙனம் நீர் வந்தீர்?

அழகிதினிப் பயமில்லை யந்திக் கப்பால்

தெரியாபுன் சிறுநெறிக ளெந்தம் வாழ்விச்

சிறுகுடியின் றிரவிங்கே சிரமம் தீர்ந்திச்

சுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று

தொகுபுகழ்சேர் திருஞான சம்பந் தன்றன்

வரியாரும் பொழிலுமெழில் மதிலுந் தோற்றும்

வயற்புகலிப் பதியினிது மருவ லாமே.

25



“அவள்” எனப்பட்டவளையே குறித்தது. “ஞானம் தமிழ்” என்பதில் சந்தி ஒன்றுச் சந்தம் நோக்கித் தொகுக்கப்பட்டது.

1348.குறிப்புரை: “சுரேசன், தமிழ் விரகன், பரம குருநாதன், பரசமய கோளரி” என்னும் ஒரு பொருட் பல பெயர்களை எழுவாயாக வைத்து, “மான குண மதுரன்” என்பதைப் பயனிலை யாக்கி முடிக்க. இது, ஞானசம்பந்தர் திருவீழிமிழலையில் படிக் காசு பெற்றுப் பஞ்ச காலத்தில் மக்களுக்கு உணவு அளித்துக் காத்த சிறப்பினைக் கூறியது. ‘தாணுவாகிய அரன்’ என்க. தாணு - (நெருப்புத்) தூண். “அருளினோடு” என்பதில் ஒடு உருபு கருவிப் பொருளில் வந்தது. கனகம் - பொன். இது மாடத்திற்கும் ‘மதிலுக்கும் அடை.’ அவனி - உலகம். நிலவு - ஒளி வீசுகின்ற. காசின் - பொற் காசினால். மலி மழை - மிக்க மழை. மான குணம் - பெருமை வாய்ந்த பண்பு. மதுரன் - இனியன். மதி, சந்திரன். செயம் - வெற்றி. சிரபுரம் - சீகாழி. சுரேசன் - பூசுரர் தலைவன். ‘ஞானத் தமிழ்’ என்பதில் சந்தித் தகர ஒற்றுச்சந்தம் நோக்கித் தொகுக்கப்பட்டது.

1349.குறிப்புரை: இப்பாட்டு, அகப்பொருள் உடன் போக்கில் தலைவன் தலைவியரைச் சுரத்திடைக் கண்டோர் பொழுதும்