|
|
|
மெறிதிரைப்
பழனக் கூடற்
செறிகவின் றம்ம திருவொடும் பொலிந்தே. |
(உரை)
கைகோள்: களவு. தோழிகூற்று
துறை: வழிப்படுத்துரைத்தல்.
(இ-ம்.)
இதற்கு "தலைவரும் விழுமம்" (தொல்.) எனவரும் நூற்பாவின்கண் 'விடுத்தற் கண்ணும்'
எனவரும் விதி கொள்க.
1
- 5: செங்கோல்................................. குடிகள்
(இ-ள்)
செங்கோல் திருவுடன் தெளிந்து அறம் பெருக்கிய - செங்கோலாகிய திருமகளுடனே அரசியல்
நூலை ஆராய்ந்து தெளிந்து அரசியலறத்தை வளர்த்த; மறுபுல வேந்தன் - வேற்று நாட்டரசனது;
உறுபடை எதிர்ந்த கொடுங்கோல் கொற்றவன் -பெரிய படைகளால் தாக்கப்பட்ட கொடுங்கோலரசனுடைய;
நெடும்படை அனைத்தும் சேரவறந்த - அளவிறந்த படைகள் முழுவதும் ஒருசேர அழிந்துபட்ட;
திருத்தகு நாளில் - நன்மை பயக்கும் நாளின்கண்; அவன் - அக்கொடுங்கோலரசனுடைய;
பழிநாட்டு நடுங்கும் நல்குடிகள் - பழிபட்ட நாட்டின்கண் வாழுகின்ற துன்புற்று நடுங்கிய
நல்ல குடிமக்கள் என்க.
(வி-ம்.)
செங்கோல் - செங்கோன்மை. அஃதாவது, அரசனாற் செய்யப்படும் முறையினது தன்மை. அம்முறை
ஒருபாற் கோடாது செவ்விய கோல்போறலிற் செங்கோலெனப்பட்டது. வடநூலாரும் தண்டமென்றோர்.
திரு-திருமகள்; செல்வமுமாம். அரசனுக்குச் செங்கோன்மையிற் சிறந்த செல்வம் பிறிதின்மையின்
அதனைத் திரு என்றார். "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன்
கோல்" எனவரும் திருக்குறளையும் (குறள்) நோக்குக. தெளிந்து என்பது அரசியல் நூல் முறைகளைத்
தெளிந்து என்றவாறு. அறம் - அரசியலறம். மறுபுலம் - வேற்று நாடு. உறுபடை என்புழி உறு
மிகுதிப்பொருட்டாய் உரிச்சொல். கொங்கோற் கொற்றவன் என்புழிக் கொற்றவன்
என்பது இகழ்ச்சி. கொடுங்கோல்-செங்கோன்மையின் மறுதலை. இது வளைந்தகோல் போறலின்
கொடுங்கோல் எனப்பட்டது. வறந்த - அழிந்துபட்ட. கொடுங்கோல் மன்னவன் இறந்த நாள்
நாட்டிற்கு நன்மை தொடங்கு நாளாதலின் அதனைத் தருத்தகு நான் என்றார்.
6
- 9: கண்ணொடு...........................அடக்கி
(இ-ள்)
கண்ணொடு கண்ணில் கழறியபோல - மாந்தர் அச்சத்தால் வாய்விட்டுச் சொல்லாமல்
பிறர் கண்களோடு தம்
|