|
|
|
பெருமுகில்
வயிறள வூட்டித்
திருவுல களிக்குங் கடன்மட மகளே, |
(உரை)
கைகோள் : களவு, தோழிகூற்று
துறை : கடலிடைவைத்துத்
துயரறிவித்தல்
(இ-ம்.)
இதற்கு நாற்றமுந் தோற்றமும் (தொல். கள. 23) எனவரும் நூற்பாவின்கண் புணர்ச்சி
வேண்டினும் எனவரும் விதிகொள்க,
26-31:
நன்கமர் .................................. மகளே
(இ-ள்)
நன்கு அமர் பவளவாயும்-கண்டோர் மிகவும் விரும்புதற்குக் காரணமான பவளமாகிய வாயும்
; கிளர் பச்சுடம்பும்-ஒளிவீசும் பச்சையுடம்பும் ; நெடுங்கயல் விழியும் - நெடிய கயல்மீனாகிய
கண்ணும் ; நிறைமலை முலையும் - அழகு நிறைந்த மலையாகிய முலைகளும், மாசுஅறப் படைத்து
- குற்றமறப் பெற்று ; மணியுடன் - முத்து முதலிய மணிகளுடனே ; நிறத்த பெருமுகில் வயிறு
அளவு ஊட்டி - நன்றித்தையுடைய பெரிய முகில்களை வயிறு கொள்ளுமளவு நீராகிய அமுதத்தை
ஊட்டி ; திரு உலகு அளிக்கும் கடல் மடமகளே - செல்வத்தை உலகத்திற்கு வழங்கா நின்ற
கடலாகிய மடப்பமுடைய பெண்ணே கேள் ! என்க,
(வி-ம்.)
அமர் - விரும்புகின்ற பச்சுடம்பு - பச்சை நிறமான உடம்பு. அழகு நிறைந்த மலை என்க,
மணி - முத்து முதலியன - வயிறு அளவு - வயிறு கொள்ளுமளவு. அளித்தல் - வழங்குதல். மடமகள்
- இளமகளுமாம்.
1-7
: இருநிலம் ................................... ஆகலின்
(இ-ள்)
இருநிலம் தாங்கிய - பெரிய நிலவுலகத்தைத் தாங்குதற்குக் காரணமான ; வலிகெழு நோன்மை
பொன்முடிச் சயிலக் கணவன் புணர்ந்து- வலிமை பொருந்திய பொறையையுடைய பொன்முடியையுடைய
மந்தரமலையாகிய கணவனைக்கூடி ; திரு எனும் குழவியும் அமுது எனும் பிள்ளையும் மதி எனும்
மகவும் - திருமகளாகிய பெண்ணையும் அமுதமாகிய மகவினையும் திங்களாகிய மகவினையும் ;
மலர்உலகு அறிய - பரந்த உலகிலுள்ளோர் அறியும்படி ; கண்ணொடு முத்தங் கலுழ்ந்து -
கண்ணில் முத்துக்களாகிய கண்ணீரைச் சொரிந்து ; உடல் கலங்கி வாய்விட்டு அலறி -
உடம்பு நொந்து வாய்திறந்தழுது ; வயிறு நொந்து ஈன்ற - கருவுயிர்த்தல் துன்பம் எய்திப்
பெற்ற
|