பக்கம் எண் :

மூலமும் உரையும்543



விடம் ஆயதும் - புகுந்து அவரை அழிக்கும் தீர்த்தற்கரிய நஞ்சாகிய துன்பமும் என்க.

     (வி-ம்.) பகுத்துண்டு ஈகுநர் என்றது இல்லறம மேற்கொண்ட சான்றோரை, அவர் செல்வம் அழிவெய்தாமையின் நிலைத்திரு என்றார். இதனோடு,

“பழியஞ்சிப் பாத்தூ ணுடைத்தாயின் வாழ்க்கை
 வழியெஞ்சு லெஞ்ஞான்று மில் ”
(குறள். 44)

என்னும் திருக்குறளையும் நிகை. நிலைத்திரு: அன்மொழித்தொகை நிலைத்த செல்வத்தையுடைய இல்லம் என்க. இல்எனும் தீச்சொல் - எமக்கு உணவு முதலியன இல்லை என்று கூறி இரக்கும் கொடிய சொல் ; இச்சொல் இரவலன் உளத்தையும் ஒரேவழி, புரவலர் உளத்தையும் வருத்துதலின் தீச்சொல் எனப்பட்டது. தோம்- துன்பம், அனைத்துயிர் ஓம்பும் அறத்தினர் என்றது துறவோரை, ஏனையோர் கொல்லுங்கள் என்று சொல்லும் சொல்லே அவர் செவியைச் சுடுதலின் அறத்தினர் பாங்கர்க்கோறல் என்று குறித்தனவாகிய குற்றமும் என்றான். குறித்தல் - சொல்லுதல், நன்றுஅறி கல்வி - நன்மையை அறிதற்குக் கருவியாகிய கல்வி. கற்றோர்மொழி கல்லார் செவியைச் சுடுதலின் கல்வியர்மொழி அரண் இழந்தோர்க்கு விடம் ஆயதும் என்றாள். ‘கல்லாத மாந்தர்க்குக் கற்றறிந்தார் சொற்கூற்றம்’ என்பதும் நோக்குக.

29-30: ஒருகணம்....................................ஒத்தன

     (இ-ள்) ஒருகணம் கூடி - ஆகிய இவ்வருத்த மெல்லாம் ஒரு கூட்மாகக் கூடி ; ஒருங்கே இருசெவி புக்கது ஒத்தன - ஒருசேர இரண்டு செவியினிடத்தும் புகுந்தாற்போல இருந்தன என்க.

     (வி-ம்.) கணம் - கூட்டம் இதனை, இவளுக்குக் குரிசில், நலத்தகு கல்வி யொன்றுளதென்று கூறியவோர் மாற்றமானது, கூடல் முதல்வனது தாளைக் கனவிலுங் காணாதவர் துயரமும் தீச்சொலிறுத்தனர் தோமும், அறத்தினர் பாங்கர்க் கோறலென்றனர் குற்றமும் கல்வியர்மொழி மூடர்க்குவிடம் போலாய வருத்தமும் ஒருங்குகூடிச் செவிபுக்க தொத்தனவென்று வினைமுடிவு செய்க. மெய்ப்பாடும் பயனும் அவை.