அல்லியாகிய சருங்குவளை
மலரினும் உவாநாளில் சிறிதேயுள்ள தேனையும் நிறைவின்றிப் பருகி அப் பாசடைக்கு உலகவர்
பயிலாத் தாரியை - அவ்வல்லியின் பசிய இலைகளின் மேலே நிலவுலகத்தினர் நன்கு பயிலாத
தேவகாந்தாரி என்னும் பண்ணை மருளொடு குறிக்கும் புனல் அணி ஊர - மயக்கத்தோடு பாடுதற்கிடனான
நீர் நிலைகளால் அழகுபெற்ற ஊரையுடைய தலைவனே என்க,
(வி-ம்.)
தாது - பூந்துகள்,துதைதல் - திமிர்தல்,சிறைசிறகு, பசுந்தாட் புல்லிதழ் ஆம்பல் எனவும்
கருந்தாட் புல்லிதழ் ஆம் பல் எனவும் கொண்டு கூட்டிக்கொள்க, பசுந்தாள் ஆம்பல் என்றது
நெய்தல் அல்லியை, கருந்தாள் ஆம்பல் என்றது கருங்குவளை ஆம்பலை, உவா - முதிராத எனினுமாம்,
மதுவம் என்புழி அம்சாரியை. தாமரையில் மிக்க தேனை அருந்தி என்றமையின் அல்லியினும்
அவற்றிலுள்ள சிறிய தேனையும் குறைவுண்டாக அருந்தி என்றாள், தாமரையில் நிறையத் தேனுண்ட
வண்டு இழிந்த ஆம்பலினும் சென்று குறைபெற உண்ணம் என்றது நீ குலமகளாகிய என்னிடத்கினும்
இன்பம் நுகர்ந்து பழிபெற்றனை என உள்ளுறை கூறியவாறு, வண்டு பெருந்தேன் அருந்தியவழி
முதலிசை பாடிற்று என்றது, நீ இயற்கைப் புணர்ச்சிக்காலத்தே பேரன்பு காட்டினை என்றவாறு,
குறைபெற அருந்தி என்றது வண்டுக்குக் கொள்ளுங்கால் வயிறுநிறையாமல் உண்டு என்றும் தலைவனுக்குக்
கொள்ளுங்கால் பழியுணட்ாக நுகர்ந்து என்றும் நுண்ணிதிற் கொள்க, பரத்தையரும் பலர்
என்பாள் பசுந்தாள் ஆம்பல் கருந்தாள் ஆம்பல் என்றாள்.பாசடைக்கு மேல் என்க, தாரி
- சாதாரி என்பதன் முதற்குறை, இதற்குத் தேவகாந்தாரி என்னும் பெயரும் உண்மையின்
உலகவர் பயிலாத்தாரி என்றாள்,
24
- 29: தானவர்.....................ஏவ
(இ-ள்)
தானவர்க்கு உடைந்து வானவர் இரப்ப இராவணன் முதலிய அரக்கர்களுக்குத் தோற்று வருந்தி
இந்திரன் முதலிய தேவர்கள் வேண்டிக்கோடலால்; உழல் தேர் பத்தினன் மகவுஎன நாறி-ஓடுகின்ற
தேர் பத்தையுடையோன் என்னும் பொருள்படும் பெயரையுடைய தயரதனுக்கு மகனாகத் தோன்றி;
முனிதழல் செல்வம் முற்றி-விசுவாமித்திர முனிவனுடைய வேள்வியை நிறைவேற்றி; பழங்கல்
பெண்வர-பழைய கல்லொன்று அகலிகை என்னும் பெண்ணுருக்கொண்டு எழச் செய்து; சனகன் மிதிலையில்
கொடுமரம் இறுத்து அவன் மகள் புணர்ந்து-சனகமன்னனுடைய மிதிலை நகரத்திலே சென்று அவன்
காட்டிய வில்லையொடித்து அவன் மகளாகிய சீதையை மணந்து கொண்டு தன் நகர்க்கு வரும்
பொழுது; எரிமழு இராமன் வில் கவர்ந்து அன்னை வினையுள் வைத்து ஏவ-எரிகின்ற மழுப்படையையுடைய
பரசுராமனது வில்லினைக்
|