பக்கம் எண் :

110 திருமுறைத்தலங்கள்


                                     “-ஊற்றுமெய்
     அன்புமிகுந்தொண்டர் குழு ஆயும் வலிதாயத்தில்
     இன்பமிகுஞான இலக்கணமே.”              (அருட்பா)

    “சிந்தை நின்றசிவாநந்தச் செல்வமே
     எந்தையே எமை ஆட்கொண்ட தெய்வமே
     தந்தையே வலிதாயத்தலைவநீ
     கந்தைசுற்றுங் கணக்கது என்கொலோ”      (பழம் பாடல்)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. வல்லீஸ்வர சுவாமி திருக்கோயில்
     பாடி, சென்னை - 600 050.

22. (வட) திருமுல்லைவாயில்

திருமுல்லைவாயில்

     தொண்டை நாட்டுத் தலம். சென்னைக்கு அருகில் உள்ளது.

      சோழநாட்டில் - தஞ்சை மாவட்டத்தில்   தென்   திருமுல்லைவாயில்
உள்ளதால்   இது   வடதிருமுல்லைவாயில்   எனப்படுகிறது. (1) சென்னை-
ஆவடி சாலையில் திருமுல்லைவாயில்  உள்ளது. (2)   பூந்தமல்லியிலிருந்து
அம்பத்தூர் தொழிற்பேட்டைக்குச் செல்லும் பேருந்தில் சென்றால் ஆவடியை
அடுத்து, திருமுல்லைவாயில் அடையலாம். சாலையில் இறங்கி ஊருள் 1 கி.மீ.
சென்று கோயிலை அடையலாம்.

     தொண்டைமான் கட்டிய திருக்கோயில். சுவாமி விமானம் கஜப்பிரஷ்ட
அமைப்புடையது. இத்தலம் முல்லைவனம் என்னும் பெயருடையது. இத்தலம்
பற்றிய வரலாறு :

     இத்தலம், கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வ
வனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், விளங்கி கலியுகத்தில்
முல்லை வனமாகத் திகழ்ந்தது. தொண்டைமான் காஞ்சியிலிருந்து ஆண்டு
வந்தான். அவன் திக்விஜயம் மேற்கொண்டான். புழல்கோட்டையிலிருந்து
கொண்டு, ஓணன், காந்தன்