பக்கம் எண் :

166 திருமுறைத்தலங்கள்


38/6. திருச்சோபுரம்.

தியாகவல்லி.

     நடுநாட்டுத் தலம்.

     மக்கள் வழக்கில் ‘தியாகவல்லி’ என்று வழங்குகிறது. கடலூர் -
சிதம்பரம் நெடுஞ்சாலையில் ஆலப்பாக்கம் புகைவண்டி நிலையம், என்று
கைகாட்டி உள்ள பாதையில் (இடப்பால்) திரும்பிச் (மங்களபுரீஸ்வரர் -
தியாகவல்லி என்று பெயர்ப்பலகை சாலையில் உள்ளது) சென்று, ‘ரயில்வே’
கேட்டைத் தாண்டி நேரே மேலும், சென்று உப்பங்கழியின் மேல்கட்டப்
பட்டுள்ள பாலத்தின் வழியாக அக்கரையை அடைந்து சவுக்குத் தோப்பைத்
தாண்டிச் சென்றால் கோயிலை அடையலாம். ஒரு சில வீடுகள் இப்பகுதியில்
உள்ளன. கோயிலுக்குச் செல்லும் வழி நொய்ம்மணலாக இருப்பதால்
இக்கோயிலுக்கு காலையில் 10 மணிக்குள்ளும் மாலை 4 மணிக்குப் பின்னரும்
செல்லுவது நல்லது. கோயில் உள்ள பகுதி ‘திருச்சோபுரம் என்றும், பக்கத்தில்
உள்ள பகுதி ‘தியாகவல்லி’ என்றும் சொல்லப்படுகிறது. அகத்தியர் வழிபட்ட
தலம். இங்குள்ள மூர்த்தி அகத்தியர் பிரதிஷ்டை என்று சொல்லப்படுகிறது.

     திருமுறைப் பெயர் ‘சோபுரம்’ என்பது. ‘சோழபுரம்’ என்பது மருவி
‘சோபுரம்’ என்றாயிற்று என்றும் ; திரிபுவனச் சக்கரவர்த்தியின் முதல்
மனைவியான தியாகவல்லி அம்மையார் இங்குத் திருப்பணி செய்த
காரணத்தால் ‘தியாகவல்லி’ என்று பெயர் பெற்றதாகவும் சொல்லப்படுகிறது.

     இறைவன் - மங்களபுரீஸ்வரர், திருச்சோபுரநாதர்.
     இறைவி - தியாகவல்லியம்மை, சத்யதாக்ஷி, வேல்நெடுங்கண்ணி.
     தலமரம் - கொன்றை.
 
     தீர்த்தம் - கோயிலுள் உள்ள கிணறும், கோயிலுக்குப் பின்னால் உள்ள
குளமுமே. கோயிலுக்குப் பின்னால் அண்மையில் கடல் உள்ளது. சம்பந்தர்
பாடல் பெற்ற தலம். மணற்பாங்கான பகுதியில் கோயில் அமைந்துள்ளது.
விசாலமான இடப்பரப்பு. மேற்கு பார்த்த கோயில். கவசமிட்ட கொடிமரத்தைக்
கடந்து முகப்பு வாயில், கோயிற்கட்டிடம் நன்றாகவுள்ளது. உள்ளே வலமாக
வரும்போது