பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 29


    சிந்தைகாண் சிந்தாத சித்தத்தார்க்குச்
          சிவன் அவன்காண் செங்கண்மால் விடையொன்றேறும்
     எந்தைகாண் எழிலாரும் பொழிலார் கச்சி
          ஏகம்பன்காண் அவன்என் எண்ணத்தானே.     (அப்பர்)

     “ஆலந்தான் உகந்து அமுது செய்தானை
           ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
     சீலந்தான் பெரிதும் உடையானைச்
           சிந்திப்பார் அவர் சிந்தையுளானை
     ஏலவார் குழலாள் உமைநங்கை
           என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
     காலகாலனைக் கம்பன் எம்மானைக்
           காணக்கண் அடியேன் பெற்றவாறே”
                                                (சுந்தரர்)

  காசணிமின்கள் உலக்கையெல்லாம் காம்பணிமின்கள் கறையுரலை
  நேசமுடைய அடியவர்கள் நின்று நிலாவுக என்று வாழ்த்தித்
  தேசமெல்லாம் புகழ்ந்தாடும் கச்சித் திருவேகம்பன்
                                    செம்பொற்கோயில்பாடிப்   பாசவினையைப் பறித்து நின்று பாடிப் பொற்சுண்ணம் இடித்து நாமே.
                                      (மாணிக்கவாசகர்)

    “ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
     பாகம் பெண்ணுருவானாய் போற்றி”
                            (திருவாச : போற். திருவக)

     “ஏகம்பத்தின் இயல்பாயிருந்து
     பாகம் பெண்ணொடாயின பரிசும்”
                           (திருவாச : கீர்த். திருவக)

  மெய்த்தொண்டர் செல்லும் நெறி அறியேன் மிக நற்பணி செய்
  கைத்தொண்டர் தம்மிலும் நற்றொண்டுவந்திலன் உண்பதற்கே
  பொய்த்தொண்டு பேசிப் புறம்புறமே உன்னைப் போற்றுகின்ற
  இத்தொண்டனேன் பணி கொள்ளுதியோ கச்சி ஏகம்பனே.
                                 (திருவேகம்பர் திருவந்தாதி)

  முன்னுறு பொருள்கட்கெல்லாம் முற்படு பழையாய் போற்றி
  பின்னுறு பொருள்கட்கெல்லாம் பிற்படு புதிதாய் போற்றி
  புன்மதியாளர் தேறாப் பூரண முதலே போற்றி
  சின்மயத் திருவேகம்ப சிவசிவ போற்றி போற்றி.
                                      (காஞ்சி புராணம்)