பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 349


93/39. திருப்பனந்தாள்.

 

    சோழநாட்டு (வடகரை)த் தலம்.

    கும்பகோணத்திலிருந்தும் மயிலாடுதுறையிலிருந்தும் பேருந்தில்
செல்லலாம். பனைமரம் தலமரமாதலின் பனந்தாள் என்று பெயர் பெற்றது.
கோயிலுக்குத் தாடகையீஸ்வரம் - தாடகேச்சுரம் என்று பெயர். தாடகை
பூசித்தமையால் வந்த பெயர். இத்தலத்திற்குத் தாலவனம் என்றும் பெயர்
(தாலம்-பனை). தாடகை என்னும் பெண் ஒருத்தி புத்திரப்பேறு வேண்டி
இத்தலத்துப் பெருமானை வழிபட்டு வந்தாள். ஒருநாள் இறைவனுக்கு மாலை
சாத்தும்போது, ஆடை நெகிழ, அதனை இரு முழங்கைகளாலும்
பற்றிக்கொண்டு, மாலை சாத்த முடியாமல் வருந்த, அவளுக்கு இரங்கிப்
பெருமான் திருமுடியைச் சாய்த்து மாலையை ஏற்றருளினார். அன்று முதல்
சாய்வாக இருந்த நிலையைப் பின்னால் குங்கிலியக்கலய நாயனார் மாற்றினார்.

    இறைவன் - செஞ்சடையப்பர், தாலவனேஸ்வரர், ஜடாதரர்,
              அருணஜடேஸ்வரர்.

    இறைவி - பிருகந்நாயகி, பெரிய நாயகி, தாலவனேஸ்வரி.

    தலமரம் - பனை.

    தீர்த்தங்கள் - பிரம தீர்த்தம், ஐராவத தீர்த்தம், தாடகை தீர்த்தம்
                முதலிய பல தீர்த்தங்கள்.

    சம்பந்தர் பாடல் பெற்ற பதி.

 “மாலைசாத்துந் தாடகை மானங் காப்பான் தாழ்ந்து பூங்கச்
                                     சிட்டீர்க்கும்
  பீடுறுகலயன் அன்பின் நிமிர்ந்தஎம் பிரான்ஊர் ஈதால்.”
                                     (திருவிளை.புரா)

     பனையின் தாளில் இறைவன் எழுந்தருளியிருத்தலால் ‘பனந்தாள்’
எனப்பட்டது. பிராகாரத்தில் இரு ஆண் பனைமரங்கள் உள்ளன.

     (இவற்றின் பக்கத்தில் தலைசாய்ந்த மூர்த்தம் உளது.) இத்தலத்து
வழிபட்ட தாடகை இராமாயணத்தில் வருபவள் அல்லள். இவள் வேறானவள்.)
மூலவர் சுயம்புமூர்த்தி. மேற்கு நோக்கிய சந்நிதி. பிரமன், திருமால், இந்திரன்,
ஐராவதம், அகத்தியர், சூரிய சந்திரர், ஆதிசேஷன்,