பக்கம் எண் :

368 திருமுறைத்தலங்கள்


    “பாண்டு வின் மகன் பார்த்தன் பணி செய்து
    வேண்டு நல் வரங்கொள் விசய மங்கை
    ஆண்டவன் அடியே நினைந்து ஆசையால்
    காண்டலே கருத்தாகி இருப்பேனே.”            (அப்பர்)

                                          -மாற்கருவின்
    கண்விசைய மங்கைக் கனிபோற் பெறத் தொண்டர்
    எண்விசைய மங்கையில் வாழ் என்குருவே.
                                         (அருட்பா)


அஞ்சல் முகவரி :-
   அ/மி. விஜயநாதேஸ்வரர் திருக்கோயில்
    திருவிஜய மங்கை
    புள்ளம் பூதங்குடி அஞ்சல் 612 301.
    கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்

102/48. திருவைகாவூர்.

    சோழநாட்டு (வடகரை)த் தலம்.

    திருவிசயமங்கைக்குப் பக்கத்தில் உள்ளது. கொள்ளிடக் கரையில் உள்ள
தலம். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை வழியாகத் திருவைகாவூருக்கு
நகரப் பேருந்து (Town Bus) செல்கின்றது.

    சுவாமிமலையிலிருந்து ‘நாகுகுடி’ செல்லும் கிளைப்பாதையில் ‘நாகுகுடி’
சென்று, அங்கிருந்து ‘திருவைகாவூர்’ செல்லும் பாதையில் சென்று
இத்தலத்தை அடையலாம். சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம். சிவராத்திரி
நாளில் புலிக்குப் பயந்து வில்வ மரத்தின்மேல் ஏறியிருந்த வேடன்
இரவெல்லாம் வில்வத்தைப் பறித்துப்போட்ட வண்ணம் தூங்காமல் இருக்க,
காலையில் இறைவன் வெளிப்பட்டு அருள்புரிந்த அற்புதத் தலம்.

    இறைவன் - வில்வவனேஸ்வரர், வில்வவனநாதர்.
    இறைவி - சர்வஜனரக்ஷகி, வளைக்கைநாயகி.
    தீர்த்தம் - எமதீர்த்தம், கோயிலுக்கு எதிரில் உள்ளது.
    தலமரம் - வில்வமரம்.