பக்கம் எண் :

370 திருமுறைத்தலங்கள்


                                           -மன்னுலகில்
    வைகாவூர் நம்பொருட்டான் வைகிய தென்றன்பர் தொழும்
    வைகாவூர் மேவிய என்வாழ் முதலே.           (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

      அ/மி. வில்வவனேஸ்வரர் திருக்கோயில்
     
திருவைகாவூர் & அஞ்சல் - 612 304
     
கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.

103/49. வடகுரங்காடுதுறை

ஆடுதுறைபெருமாள் கோயில்.

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் ஆடுதுறை பெருமாள் கோயில் என்று வழங்குகிறது.

     கும்பகோணம்- திருவையாறு, சாலையில், சுவாமிமலை, உமையாள்
புரம், கபிஸ்தலம் தாண்டி, உள்ளிக்கடை என்னும் ஊரையடுத்து இத்தலம் -
ஆடுதுறை உள்ளது. (ஆடுதுறை என்ற பெயரில் மற்றொரு தலம்
இருப்பதாலும், இத்தலத்திற்குப் பக்கத்தில் பெருமாள் கோயில் என்னும்
வைணவத்தலம் இருப்பதாலும், இத்தலம் அந்த ஆடுதுறையினின்றும்
வேறுபட்டறிய ஆடுதுறை பெருமாள் கோயில் என்று வழங்குகிறது.
வடகுரங்காடுதுறை என்று கேட்டால் எவர்க்கும் தெரியாது.) இத்தலம்
குடந்தையிலிருந்து 20 கி.மீ. - திருவையாற்றிலிருந்து 5 கி.மீ. தொலைவு.
சாலையோரத்தில் சற்று உள்ளடங்கிக் கோயில் உள்ளது. வாலி வழிபட்ட
தலம்.

     இறைவன் - தயாநிதீஸ்வரர், குலைவணங்கீசர், வாலிநாதர்,
               சிட்டிலிங்கநாதர்.
     இறைவி - ஜடாமகுடேஸ்வரி, அழகுசடை முடியம்மை.
     தலமரம் - தென்னை.

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     (கர்ப்பிணி ஒருத்தியின் தாகத்தைத் தீர்க்கத் தென்னங்குலையை
இறைவன் வளைத்துக் கொடுத்ததால் குலைவணங்கீஸ்வரர் என்றும்,