பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 389


109/55. திருப்பழுவூர்
கீழப்பழுவூர்

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

   
மக்கள் கீழப்பழுவூர் என்று வழங்குகின்றனர். திருச்சி - அரியலூர்
சாலையில் உள்ளது. இவ்வூர் மேலப்பழுவூர், கீழைப்பழுவூர் என்ற இரு
பிரிவாகவுள்ளது. இத்தலம் கீழைப்பழுவூர் ஆகும்.

    பழு-ஆல். ஆல் தலமரமாதலின் பழுவூர் என்று பெயர் பெற்றது.
அம்பிகை தவஞ் செய்ததால் யோகவனம் எனப்படுகிறது. பரசுராமர், தன்
தாயைக் கொன்ற பழிதீரும் பொருட்டு வழிபட்ட பதி. மூலவர் முன்னாலுள்ள
மேல் உத்தரத்தில் பரசுராமர் உருவம் உள்ளது. ஜமதக்னி முனிவர் உருவம்
மேலப் பழுவூரில் உள்ளது. சாலையோரத்தில் கோயில் வளைவு உள்ளது.
பழமையான கோயில். அறநிலையத்துறைக்கு உட்பட்டது - போதிய
பராமரிப்பில்லை.

      இறைவன் - வடமூலேஸ்வரர், யோகவனேஸ்வரர்,
              ஆலந்துறையார் (வடம்-ஆல்)
      இறைவி - அருந்தவநாயகி
     
தலமரம் - ஆல்
     
தீர்த்தம் - பிரமதீர்த்தம் (எதிரில் உள்ளது)
     
சம்பந்தர் பாடல் பெற்றது.

     
உமை தவம் செய்த பதி, மற்றும் பிரமன், திருமால், இந்திரன்,
அகத்தியர், சந்திரன், வசிட்டர், காசிபர், வியாசர் முதலியோர் வழிபட்ட
பெருமையுடைய தலம். இத் தலத்துப் பெருமையை விளக்கும் தலபுராணப்
பாடல் வருமாறு :-

    “மறைகளுக்கு மேல் மறையதாய் நிற்பது மனத்தின்
     நிறையவா வினைமுற்றுறச் செய்வது நிலைசேர்
     பொறையும் ஞானமும் போற்றுவார்க் களிப்பது புரைதீர்
     தரையின் மேம்படு பழுவை யென்றுள தொருதலமே.”


    பேருந்து நிலையத்திற்கு அருகில் கோயில் உள்ளது. கிழக்கு நோக்கியது.
எதிரில் குளம் உள்ளது. அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. அர்த்த மண்டபச்
சுவரையொட்டி காலசம்ஹாரர், அர்த்தநாரீஸ்வரர், கல்யாணசுந்தரர், கங்காளர்,
பைரவர் உருவங்கள் உள்ளன. தெற்புற மேடைமீது அறுபத்துமூவர்,
திரிபுராந்தகர், ரிஷாபாரூடர் முதலிய