பக்கம் எண் :

396 திருமுறைத்தலங்கள்


112/58. திருமாந்துறை

     சோழநாட்டு (வடகரை)த் தலம்.

     லால்குடிக்குப் பக்கத்தில் உள்ளது. திருச்சி - லால்குடி சாலையில்
உள்ள தலம். திருச்சியிலிருந்து 15 கி.மீ. திருச்சியிலிருந்தும் லால்குடியி
லிருந்தும் செல்லலாம். பேருந்துப் பாதையுள்ளது. இது ‘வடகரை மாந்துறை’
என்றழைக்கப்படுகிறது. (கும்பகோணம் அருகில் திருமங்கலக்குடிக்குப்
பக்கத்தில் உள்ள மாந்துறை என்னும் ஊர் தென்கரை மாந்துறை
எனப்படுகிறது. அஃது வைப்புத்தலம்.) சூரியன், சந்திரன், இந்திரன்,
மிருகண்டு முனிவர் ஆகியோர் வழிபட்டது.

     (தாயை இழந்த மான்குட்டிக்காக இறைவனே தாயாக மாறியதாக வரலாறு)

     இறைவன் - ஆம்ரவனேஸ்வரர், சுத்தரத்னேஸ்வரர், மிருகண்டீசுவரர்,
               ஆதிரத்னேஸ்வரர்
     இறைவி - அழகம்மை, பாலாம்பிகை.
     தலமரம் - மாமரம் (ஆம்ரம்)
     தீர்த்தம் - காயத்ரி நதி.

     இத்தலத்தின் பெயர்கள் - ஆம்ரனம், பிரம்மானந்தபுரம்,
                           மிருகண்டீசுவரபுரம் என்பன.

     சம்பந்தர் பாடல் பெற்றது - அருணகிரியாரும் பாடியுள்ளார்.