பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 421


அஞ்சல் முகவரி :-

    அ/மி. உஜ்ஜீவநாதசுவாமி திருக்கோயில்
    உய்யக்கொண்டான் திருமலை & அஞ்சல்
    (வழி) சோமரசம்பேட்டை. S.O.
    திருச்சி மாவட்டம் - 620 102.

122/5. மூக்கீச்சுரம்

உறையூர், (திருச்சி)

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     திருச்சிராப்பள்ளி நகரின் ஒரு பகுதி உறையூர். இதுவே மூக்கீச்சுரம்
எனப்படுகிறது. திருச்சி - உறையூர் இடையே அடிக்கடி பேருந்துகள் உள்ளன.
சோழ மன்னர்களின் தலைநகரமாக உறையூர் ஒரு காலத்தில் விளங்கி வந்தது.
புகழ்ச்சோழ மன்னர் ஆண்ட பதி. “ஊரெனப்படுவது உறையூர்” என்னுந்
தொடர் இதன் சிறப்பினையுணர்த்தும். “உறந்தை” என்றும் இதற்குப் பெயர்.
மூவேந்தரும் வழிபட்ட சிறப்புடைய தலம்.

    உதங்கமுனிவருக்கு இறைவன் ஐந்து காலங்களில் ஐந்து
வண்ணங்களோடு காட்சி நல்கிய தலம். இதனால் இறைவனுக்குப்
பஞ்சவர்ணேஸ்வரர் என்று பெயர். வீரவாதித்தன் என்னும் சோழ மன்னன்
உலா வரும்போது அவனது யானையைக் கோழியொன்று வென்றமையால்
இத்தலம். ‘கோழியூர்’ என்றும் பெயர் பெற்றது. இச்சிற்பம் (யானையைக்
கோழி தாக்குவது) ஆலயத்துள் பலவிடங்களில் உள்ளது. பழைமையும்
சிறப்பும் உடைய இப்பதி இன்று வாணிபத்தில் மேலோங்கியுள்ளது.

    
இறைவன் - பஞ்சவர்ணேஸ்வரர்
    
இறைவி - காந்திமதி
    
தலமரம் - வில்வம்
    
தீர்த்தம் - சிவதீர்த்தம்

     சம்பந்தர் பாடல் பெற்ற தலம்.

    
இத்திருக்கோயில் கடை வீதியில் அமைந்துள்ளது. கிழக்கு நோக்கிய
முகப்பு வாயில். கல் மண்டபம். உட்சென்றால் பெரிய