பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 433


126/9. மேலைத்திருக்காட்டுப்பள்ளி

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

    
மக்கள் வழக்கில் திருக்காட்டுப்பள்ளி என்று வழங்குகிறது.
திருக்காட்டுப்பள்ளி என்னும் பெயருடைய இரு தலங்கள் உள்ளன.
காவிரியின் வடகரையில் உள்ளது கீழைத் திருக்காட்டுப்பள்ளி எனப்படும்.
அது திருவெண்காட்டிற்கு அருகில் உள்ளது.

     இத்தலம் தென்கரையில் உள்ளது. மேலைத் திருக்காட்டுப்பள்ளி
எனப்படும். இங்குத்தான் குடமுருட்டியாறு பிரிகின்றது.

     திருச்சி, தஞ்சையிலிருந்தும், திருக்கண்டியூர், திருவையாறு, கல்லணை
முதலிய இடங்களிலிருந்தும் இத்தலத்திற்குப் பேருந்துகள் உள்ளன.
திருவையாறு - கல்லணை சாலையில் திருக்காட்டுப்பள்ளி உள்ளது.

     இறைவனைத் திருமால், பிரமன், சூரியன், பகீரதன், உறையூர் அரசி
ஆகியோர் வழிபட்ட தலம். அக்கினி வழிபட்ட தலமாதலின் கோயிலுக்கு
‘அக்னீஸ்வரம்’ என்பது பெயர்.

    இறைவன் - அக்னீஸ்வரர், தீயாடியப்பர்
    இறைவி - சௌந்தரநாயகி, அழகம்மை
   
தலமரம் - வன்னி, வில்வம் இரண்டும் உள்ளன.

    தீர்த்தம் - அக்கினி தீர்த்தம், காவிரி. (அக்கினி தீர்த்தம் கிணறு
             வடிவில் உள்ளது.)இத் தீர்த்தத்தில் கார்த்திகை ஞாயிறு,
             மாசிமகம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் முதலிய
             நாள்களில் நீராடி வழிபடுதல் சிறப்பென்பர்.

    
சம்பந்தர், அப்பர் ஆகியோர் பாடல் பெற்ற தலம்.

    இத்தலம் பற்றிச் சொல்லப்படும் ஒரு செய்தி :-

    உறையூரிலிருந்து ஆண்டு வந்த மன்னன், உறையூர் நந்தவனத்தில்
இறைவனுக்குரியதாகப் பூத்து வந்த செவ்வந்தி மலர்களைப் பணியாளன்
பறித்து வந்து தர அவற்றைப் பெற்றுத் தன் இரு மனைவியருக்கும் தந்தான்.
மூத்த மனைவி அம்மலர்களைத் தான் சூடிக்கொள்ளாமல் சிவபெருமானுக்கு
அணிவித்து வந்தாள். இளைய

தலம்-28