பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 451


(கி.பி. 907-955) கருவறையும், அர்த்த மண்டபமும் திருப்பணி செய்யப்
பெற்றுள்ளன.

   
“பொந்தின் னிடைத் தேன் ஊறிய பொழில்சூழ் புளமங்கை
    அந்தண் புனல்வரு காவிரி ஆலந்துறையானைக்
    கந்தம்மலி கமழ் காழியுள் கலைஞான சம்பந்தன்
    சந்தம்மலி பாடல்சொலி ஆடத் தவம் ஆமே.”   (சம்பந்தர்)

    (இப்பாட்டில் ‘பொந்தின்னிடைத் தேன்ஊறிய’ என்று பாடியிருப்
பதற்கேற்ப, கோயில் சாளரத்தில் தேனடை இருக்கின்றது.)

                                    
     - நன்குடைய
  
  உள்ளமங்கை மார் மேலுறுத்தாதவர் புகழும்
     புள்ள மங்கை வாழ் பரம போகமே.     (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

   
அ/மி. பசுபதீஸ்வரர் திருக்கோயில்
    பசுபதி கோயில் - அஞ்சல் - 614 206
    தஞ்சை மாவட்டம்.

134/17. சக்கரப்பள்ளி

ஐயம்பேட்டை

           
     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் இவ்வூர் ஐயம்பேட்டை என்று வழங்குகிறது.
இப்பெயரில் பல ஊர்கள் இருப்பதால் வழக்கில் இவ்வூரைத் தஞ்சாவூர்
ஐயம்பேட்டை என்று கூறுகின்றனர்.

     கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் ஐயம்பேட்டை உள்ளது.
நெடுஞ்சாலையின் ஓரத்திலேயே சற்று உள்ளடங்கி, கோயில் உள்ளது.

     சாலையில் திருக்கோயிலின் பெயர்ப் பலகை உள்ளது. ஊர்ப் பெயர் -
ஐயம்பேட்டை. கோயிலிருக்கும் பகுதி சக்கரப்பள்ளி என்று வழங்குகிறது.
கும்பகோணம் - தஞ்சாவூர் புகைவண்டிப் பாதையில்