நூல்களிற் சொல்லியிருக்க இருளாகிய கேவலத்திலே ஒளியாகிய மாயையுங் கூடிநிற்கும் என்னலாமோவென்னில், அப்படி ஒளியென்று சொல்லப்பட்டது அந்தக் காரண மாயையிலே நின்றுந் தோன்றி ஆணவமல மறைப்பை நீக்கப்பட்ட கலையாதி தத்துவங்களாகிய காரிய மாயையையென அறிக. அப்படி ஆணவமல மறைப்பை நீக்குகிற கலையாதி தத்துவங்களை ஒளி யென்பதற்கு பி - ம் சித்தியாரில் "போதகா ரியமறைத்து நின்றது புகல் மலங்காண், ஓதலாங் குணமு மாக வுயிரினுள் விரவ லாலே, காதலா லவித்தை சிந்தத் தருங்கலை யாதி மாயை, ஆதலா லிரண்டுஞ் சோதி யிருளெனவேறா மன்றே" (2.84) எ - ம், இந்நூலினும் "புகலுமல மொழித்தற்குக் கலாதிமுதல் மாயை பொருந்தியிடும்" (37) என்ற செய்யுளில் "இகலிவரு மிவையுணரி லிருள்வெளியாந் தன்மை யெய்தும்" எ-ம் கண்டுகொள்க. அன்றியும் இச்செய்யுளின் கருத்தாகிய "மலநிலை யொதுங்க மாயா காரியங் - குலவிடு மிருளொளி குறியிதற் கென்றது" எ - ம், கலையாதி தத்துவங்களை ஒளி யென்பதற்குச் சிவஞானபோதத்தினும் "கலையாதி மண்ணாந்தங் காணிலவை மாயை - நிலையாவாந் தீபமே போல"(3.7) எ-ம், "மாயாதனுவிளக்காய்" (4.5) எ-ம், திருவருட்பயனிலும் "விடிவா மளவும் விளக்கனைய மாயை-வடிவாதி" (30) எ-ம் வரும் ஏதுக்களையுங் கண்டு கொள்க. ஆக இங்ஙனங் கலையாதி தத்துவங்களாகிய காரிய மாயையை ஒளியென்றது கொண்டே ஆன்மாக்கள் கேவலத்தில் மாயா காரணந் தாரகமாக ஒடுங்குவார்களென்பதை அநுபவத்தாற் கண்டு கொள்க. அப்படி நித்திரையிற் கேவலத்துக்கு ஆன்மாக்கள் மாயையிலே ஒடுங்குவார்க ளென்பதுகொண்டே சங்கார கேவலத்துக்கும் மாயையிலே ஒடுங்கவார்களென்று சொல்லலாமோ வென்னில், முன்னே நித்திரையிற் கேவலத்துக்கு "மலமன்றி யொன்று மில்லையெனு மியல்பாய்" (33) என்று ஆணவ மறைப்புக்குச் சொன்னதைச் சங்கார கேவலத்துக்கு உபமானமாகக் கேட்கையால் இதற்கும் அப்படிச் சொல்லப்படுமென அறிக. அன்றியும், நித்திரையிற் கேவலம்போல இருக்குஞ் சங்கார கேவலமும் என்பதற்கு பி - ம் தத்துவ விளக்கத்தில் "எல்லியி னித்திரைப் போலிளைப் பாற்றும் |