பக்கம் எண் :

494 திருமுறைத்தலங்கள்


149/32. திருநீலக்குடி

தென்னலக்குடி

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் ‘தென்னலக்குடி’ என்று வழங்குகின்றனர். கும்பகோணம்
காரைக்கால் சாலையில், கும்பகோணத்தை அடுத்துள்ளது. ஆடுதுறை
யிலிருந்தும் தென்னலகுடிக்கு வரலாம். சாலையோரத்தில் கோயில் உள்ளது.
பாற்கடலில் அமுதுகடைந்த காலத்தில் தோன்றிய நஞ்சையுண்டு இறைவன்
நீலகண்டராக எழுந்தருளி விளங்கும் தலமாதலின் திருநீலக்குடி என்றாயிற்று.

    பஞ்சவில்வாரண்யக்ஷேத்திரம். வசிட்டர், காமதேனு, தேவமாதர்,
மார்க்கண்டேயர் வழிபட்ட சிறப்புடையது. திருவாவடுதுறை ஆதீனத்துத்
திருக்கோயில். அப்பர் வாக்கில் ‘நெல்லுநீள் வயல் நீலக்குடி’ என்று
வருவதற்கேற்ப சுற்றிலும் வயல்கள் உள்ளன.

    இறைவன் - மனோக்ஞ நாதசுவாமி, வில்வாரண்யேசுவரர், பிரமநாயகர்,
நீலகண்டேஸ்வரர், தைலாப்பியங்கேசர், காமதேனு புரீஸ்வரர்.

    இறைவி - அநூபமஸ்தனி (திருமணக்கோலம்)
             பக்தாபீஷ்டதாயினி (தவக்கோலம்)
    தலமரம் - பஞ்சவில்வம்
    தீர்த்தம் - 1) தேவி தீர்த்தம் (எதிரில் உள்ள குளம்)
             
2) பாரத்வாஜதீர்த்தம் (வெளியில் உள்ள குளம்)
             3) மார்க்கண்டேய தீர்த்தம் (உட்கிணறு)
             4) பிரம தீர்த்தம் (கிணறு)
             5) க்ஷீரகுண்டம் (காவிரிக் கரையோரம்)
 
     அப்பர் பாடல் பெற்றது.

     சாலையோரத்தில் கோவிலுள்ளது. முகப்பு வாயிலைக் கடந்ததும் நேரே
மூலவர் தரிசனம். உட்பிராகாரத்தில் சூரியன், பிரம்மா வழிபட்ட
பிரம்மலிங்கம், விநாயகர், சுப்பிரமணியர், ஷண்முகர், விசுவநாதர்,
மகாலட்சுமி, தெய்விகப்பலாமரம், நவக்கிரகம், பைரவர் சந்நிதிகள்