பக்கம் எண் :

582 திருமுறைத்தலங்கள்


                                         - ஏணுடன்கா
     ஈட்டும் பெருநறையா றென்ன வயலோடி
     நாட்டும் பெருநரையூர் நம்பனே”              (அருட்பா)


அஞ்சல் முகவரி :-

     
அ/மி. சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்
     திருநறையூர் - நாச்சியார் கோயில் அஞ்சல்
     குடந்தை வட்டம் - தஞ்சை மாவட்டம் 612 102

183/66. அரிசிற்கரைப்புத்தூர்

அழகாபுத்தூர், அளகாபுத்தூர்.

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     கும்பகோணத்திலிருந்து நாச்சியார் கோயிலுக்குச் செல்லும் பேருந்துப்
பாதையில் சென்றால் திருநறையூருக்கு முன்னாலேயே உள்ள இத்தலத்தைய
டையலாம். நெடுஞ்சாலைத்துறையின் பெயர்ப் பலகை அழகாபுத்தூர்
என்றுள்ளது. மக்கள் அளகாபுத்தூர் என்று வழங்குகின்றனர். தேவாரத்தில்
அழகாபுத்தூர் என்று வருகின்றது. பெரிய புராணத்தில் இத்தலம்
செருவிலிபுத்தூர் என்று குறிப்பிடப் பெறுகின்றது. இத்தலத்தையடுத்துத்
திருநறையூர் சித்தீச்சரம் உள்ளது. சாலையோரத் தலம். கோச்செங்கட் சோழன்
திருப்பணி செய்த தலம். புகழ்த்துணைநாயனார் முத்திப்பேறு பெற்ற தலம்.
ஊரின் தொடக்கத்திலேயே கோயில் பேருந்துச் சாலையோரத்தில் சற்றுத்
தள்ளி வயலில் உள்ளது. நகரத்தார் திருப்பணி பெற்று அரிசிலாற்றின்
கரையில் அழகாகக் காட்சியளிக்கிறது.

     இறைவன் - சொர்ணபுரீஸ்வரர், படிக்காசளித்தநாதர்.
     இறைவி - சௌந்தரநாயகி, அழகாம்பிகை
     தலமரம் - வில்வம்.
     தீர்த்தம் - (கோயில் எதிரில் உள்ளது.)

     மூவர் பாடல் பெற்ற தலம்.