பக்கம் எண் :

584 திருமுறைத்தலங்கள்


                                        - “காட்டும்
     பரிசிற்கரைப்புற்றோர் பாங்குபெற ஓங்கும்
     அரிசிற்கரைப் புத்தூரானே.”            (அருட்பா)


அஞ்சல் முகவரி :-
     அ/மி. சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்
     அழகார்புத்தூர் - கிருஷ்ணபுரம் - 612 401
     சாக்கோட்டை S.O. - (வழி) கும்பகோணம்
     கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.

184/67. சிவபுரம்.

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     (1) கும்பகோணம் - திருவாரூர் நெடுஞ்சாலையில் சாக்கோட்டை
சென்று, சாக்கோட்டையில், “பட்டாமணிஐயர் ஸ்டாப்” இடத்திற்குப் பக்கத்தில்
பிரியும் (சிவபுரி) கிளைப் பாதையில் (மண் பாதையில்) சென்று, வழியில்
மலையப்பநல்லூர் ஆலமரத்துப் பிள்ளையாரை வணங்கியவாறே 2 கி.மீ.
சென்றால் சிவபுரத்தை அடையலாம். கோயில் வாயில்வரை காரில், பேருந்தில்
செல்லலாம்.

     (2) கும்பகோணம் - திருவாரூர் ; கும்பகோணம் - மன்னார்குடிச்
சாலையில் சாக்கோட்டை சென்று - வேளாண்மை விரிவாக்க மையத்திற்கு
அருகில் பிரியும் சாலையில் 2 கி.மீ. சென்று சிவபுரம் அடையலாம்.