பக்கம் எண் :

590 திருமுறைத்தலங்கள்


                                          - “மாலுங்கொள்
     வெப்புங்கலைய நல்லோர் மென்மதுரச் சொன்மாலை
     செப்புங்கலைய நல்லூர்ச்சின்மயனே.”           (அருட்பா)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. அமிர்தகலேஸ்வரர் திருக்கோயில்
     சாக்கோட்டை & அஞ்சல் - 612 401
     கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.

186/69. கருக்குடி

மருதாந்தநல்லூர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் “மருதாந்தநல்லூர்” என்று வழங்குகின்றனர்.

     கும்பகோணம் - மன்னார்குடிச் சாலையில் உள்ள தலம்.
     இறைவன் - கருக்குடிநாதர், பிரம்மபுரீசுவரர், சற்குணலிங்கேஸ்வரர்.
     இறைவி - அத்வைதநாயகி, கல்யாணநாயகி, சர்வாலங்காரநாயகி

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     இராமேசுவர வரலாறு இங்கும் சொல்லப்பட்டு, அநுமத்லிங்கம் என்ற
பெயரால் வழிபடப் பெறுகிறது. சிறிய பழைமையான கோயில், கிழக்கு
நோக்கியது. சுவாமி, அம்பாள் ஆகிய இரு சந்நிதிகளும் கிழக்கு
நோக்கியுள்ளன. கருவறை விமானங்கள் மிகவும் உயர்ந்தவை. வாயிலில்
விநாயகர், கார்த்திகேயர் சந்நிதிகள் உள்ளன. பக்கத்தில் உள்ளது
அநுமத்லிங்கம். சிவலிங்கத் திருமேனி- சிறிய மூர்த்தி. மிக மிகத் தாழ்வான
ஆவுடையார். மண்ணாலானது. கல்லாலான பீடம்.

     கோஷ்டங்களில் நர்த்தனவிநாயகர், இருபுறம் பூதகணங்கள் ;
தட்சிணாமூர்த்தி (மேலே வீணாதர தட்சிணாமூர்த்தி) ; லிங்கோற்பவர்
மூர்த்தங்கள் உள்ளன. இத்தலத்திற்குப் பக்கத்தில் ஏனாதிநாயனார் அவதரித்த
ஏன நல்லூர் என்னும் எயினனூர் உள்ளது.