பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 599


190/73. திருப்பனையூர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     1) பேரளம் - திருவாரூர்ச் சாலையில், சன்னாநல்லூரைக் கடந்து,
மேலும் சென்றால் ‘பனையூர்’ என்று கைகாட்டி உள்ளது. அக்கிளைப்
பாதையில் 1 கி.மீ. செல்ல வேண்டும். குறுகலான மண் பாதை, பேருந்து
செல்லாது. கார், வேன் செல்லும்.

     2) இதே சாலையில், மேலும் சென்று, ஆண்டிப்பந்தல் என்னும் ஊரை
அடைந்து, திருமருகல், நாகூர் செல்லும் பாதையில் திரும்பி, ‘கோணமது’
என்னும் இடத்தில் இடப்பக்கமாகத் திரும்பிச் செல்லும் குறுகலான
கிளைப்பாதையில் 1 கி.மீ. சென்றால் திருப்பனையூரை அடையலாம். பேருந்து
செல்வது சற்றுச் சிரமம். வேன், கார் செல்லும்.

     பழைமையான கோயில், சிறிய ஊர். கரிகாற் சோழன் வளர்ந்த ஊர்.
பனைமரங்களை மிகுதியாக உடைய மணற்பாங்கான ஊர். “தாலவனம்”
என்னும் பெயர் கொண்டது. (தாலம்-பனை) கோயிலுக்குத் ‘தாலவனேஸ்வரம்’
என்று பெயர். சப்தரிஷிகள், பராசர முனிவர், மகாலட்சுமி, கரிகாற்சோழன்
ஆகியோர் வழிபட்ட தலம்.

     (சப்தரிஷிகள் : 1) கௌசிகர் 2) காசிபர் 3) பரத்வாஜர் 4) கௌதமர் 5)
அகத்தியர் 6) அத்ரி 7) பிருகு)

     இறைவன் - சௌந்தரேஸ்வரர், அழகியநாதர், தாலவனேஸ்வரர்
     இறைவி - பிரஹந்நாயகி, பெரியநாயகி
     தலமரம் - பனைமரம் (கோயிலில் உள்ளன)
     தீர்த்தம் - பராசர தீர்த்தம், (அமிர்தபுஷ்கரணி, திருமகள் தீர்த்தம்)
     தீர்த்தம் கோயிலின் எதிரில் உள்ளது.

     (கல்வெட்டில் இறைவன் திருப்பெயர் ‘பனையடியப்பன்’,
‘பனங்காட்டிறைவன்’ என்று குறிக்கப் பெறுகின்றது.)

     சுந்தரர், திருவாரூர்ப் பங்குனி உத்தரத் திருநாளுக்காகப் பரவையாரின்
வேண்டுகோளின்படி, திருப்புகலூர் இறைவனிடம் பொன் பெற்று “தம்மையே
புகழ்ந்து” என்று பாடித் திருப்புகலூர் வணங்கிய பின்பு, திருப்பனையூர்
நினைத்துவரலானார். அப்போது ஊரின் புறத்தே இறைவன் நடனக் காட்சி
காட்டியருள, எதிர் சென்று