பக்கம் எண் :

604 திருமுறைத்தலங்கள்


    “திருவும் உரைமகளும் நிறைசெம்பொன் மணிமாடம்
     மருவும்மொரு திருவிற்குடி வளமுற்றிடு தளியின்
     வருவாரருள் பெறவே தருவய வீரட்டநாதன்
     இருதாள் மலரெழில் நாள் மலர் இட்டுப் பணிவோமே.”
                                        (தனிச்செய்யுள்)

    “சலமுடைய சலந்தரன்றன் உடல்தடிந்த நல்லாழி
     நலமுடைய நாரணற்கு அன்று அருளியவாறு என்னேடீ
     நலமுடைய நாரணன்தன் நயனம் இடந்து அரனடிக்கீழ்
     அலராக இட வாழியருளினன்காண் சாழலோ.” 
                                      (திருவாசகம்)

                                    - “பண்புடனே
     எற்குடியானங்கொண்டிருக்க மகிழ்ந்தளித்த
     விற்குடியின் வீரட்டமேயவனே.”         (அருட்பா)


அஞ்சல் முகவரி :-
     அ/மி. வீரட்டானேசுவரர் திருக்கோயில்
     திருவிற்குடி - அஞ்சல் 610 101
     (வழி) கங்களாஞ்சேரி
     நாகப்பட்டினம் வட்டம் - மாவட்டம்.

192/75. திருப்புகலூர்
193/76. திருப்புகலூர் வர்த்தமானீச்சரம்