பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 631


202/85. தேவூர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     1) கீவளூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ளது. சாலையோர ஊர்,
கோயிலும் அருகில் உள்ளது.

     2) திருவாரூர் - வலிவலம் நகரப்பேருந்து தேவூர் வழியாகச் செல்கிறது.
தேவூரில் அக்ரஹார Stopping என்று கேட்டு இறங்கினால் கோயிலுக்கு
எதிரிலேயே இறங்கலாம்.

     3) திருவாரூர் - நாகப்பட்டினம் சாலையில் கீவளூர் வந்து அங்கிருந்து
திருத்துறைப்பூண்டி சாலையில் சென்றால் தேவூரையடையலாம்.

     தேவர்கள் வழிபட்டதால் தேவூர் என்று பெயர் பெற்றது. மாடக்கோயில்,
கௌதமர், வியாழபகவான், இந்திரன், குபேரன், சூரியன் ஆகியோர்
வழிபட்டது. கதலிவனம், விராடபுரம், அரசங்காடு, தேவனூர் என்பன தலத்தின்
வேறு பெயர்கள். விருத்திரனைக் கொன்ற பழிநீங்க இந்திரன் வழிபட்ட தலம்.
குபேரன் வழிபட்டு சங்க, பதுமநிதிகளைப் பெற்றான். விராடன் தன் மகள்
உத்தரையுடன் இங்கு வந்து இறைவனை வழிபட்டான். கோயில் ஊர் நடுவே
உள்ளது.