பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 667


அஞ்சல் முகவரி:-

     அ/மி. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்
     ஆலங்குடி & அஞ்சல் - 612 801.
     கும்பகோணம் வட்டம் - தஞ்சை மாவட்டம்.

216/99. அரதைப்பெரும்பாழி

ஹரித்வாரமங்கலம்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் அரித்துவாரமங்கலம் என்று வழங்குகிறது.

     தஞ்சையிலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் பேருந்துகள் உள்ளன.
தஞ்சையிலிருந்து இத்தலத்திற்கு நகரப்பேருந்து (Town Bus) உள்ளது.
கும்பகோணம் மன்னார்குடிப் பாதையில் வெட்டாற்றுப் பாலத்தைத் தாண்டி,
அமராவதி ஊரிலிருந்து, வலப்பால் பிரியும் அம்மாப்பேட்டை சாலையில்
சென்று, கீழ்ப்பாலம் என்னுமிடத்தில் இடப்பக்கமாகப் பிரியும் கிளைப்
பாதையில் சென்று பெருங்குடி என்னும் ஊரைத் தாண்டிச் சென்றால்
அரதைப் பெரும் பாழியை அடையலாம். தஞ்சையிலிருந்து, அம்மாப்
பேட்டைக்கு இவ்வூர் வழியாக நகரப் பேருந்து செல்கிறது.

     பழைய கோயில். திருமால் பன்றி வடிவங்கொண்டு இறைவன் முன்பு
பள்ளம் (துவாரம்) பறித்தமையால் அரி-துவார-மங்கலம் என்று பெயர்
பெற்றது என்பர்.

     இறைவன் - பாதாளேஸ்வரர், பாதாள வரதர்
     இறைவி - அலங்காரவல்லி
     தலமரம் - வன்னி
     தீர்த்தம் - பிரம தீர்த்தம். கோயிலுக்கு எதிரில் உள்ளது.

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     மூன்று நிலைகளுடைய கோபுரம் - கிழக்கு நோக்கியது. உள்ளே
சென்றதும் வலப்பால் நடராசர் தெற்கு நோக்கிய காட்சி. பதஞ்சலி,
வியாக்ரபாதர். சிவகாமி உடன் எழுந்தருளினார். வெளியில் சுப்பிரமணியர்
சந்நிதி. சம்பந்தர் பதிகம் பொறிக்கப்பட்டுள்ளது.