பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 689


அஞ்சல் முகவரி:-

     அ/மி. மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில்
     கோவிலூர் - முத்துப்பேட்டை அஞ்சல் - 614 704
     திருத்துறைப்பூண்டி வட்டம் - திருவாரூர் மாவட்டம்.

225/108. இடும்பாவனம்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     (1) முத்துப்பேட்டை - வேதாரண்யம் பேருந்துச் சாலையில் உள்ள
தலம்.
     (2) திருத்துறைப்பூண்டியிலிருந்து - தொண்டியக்காடு செல்லும் டவுன்பஸ்
ஏறி இத்தலத்திற்கு வரலாம்.

     (3) முத்துப்பேட்டையிலிருந்து வரவும் பேருந்து உள்ளது. கோயில்
பேருந்துச் சாலையின் அருகில் உள்ளது.

     இடும்பன் வழிபட்ட தலம். இடும்பனின் சகோதரி இடும்பையை வீமன்
மணந்து கொண்டதால் வியாசமுனிவர் பாண்டவர்களைப் பார்த்து
“இடும்பைக்கு அருள் செய்த இப்பதி இன்றுமுதல் இடும்பாவனம் என்று
வழங்குவதாகுக” என்றமையால் இப்பதி இடும்பாவனம் என்று பெயர் பெற்றது
என்பது புராண வரலாறு. இடும்பனின் ஊர் இத்தலத்திற்குப் பக்கத்தில் உள்ள
குன்றளூர் என்பர். அகத்தியருக்குத் திருமணக்கோலம் காட்டியருளிய தலம்.
சுவாமிக்குப் பின்னால் மணவாளக்கோலம் உள்ளது. வில்வவனம்,
சற்குணேச்சபுரம், மங்கலநாயகிபுரம், மணக்கோலநகர் என்பன இத்தலத்தின்
வேறுபெயர்கள். பிரமன், அகத்தியர், எமன், இராமர் ஆகியோர் வழிபட்டது.

     இறைவன் - சற்குணேஸ்வரர், சற்குணநாதர், மணக்கோல நாதர்,
கல்யாணேஸ்வரர், இடும்பாவனேஸ்வரர்

     இறைவி - மங்களவல்லி, மங்களநாயகி, கல்யாணேஸ்வரி
     தலமரம் - வில்வம்
     தீர்த்தம் - பிரமதீர்த்தம், அகத்தியதீர்த்தம், எமதீர்த்தம். (எதிரில் உள்ளது)
     தலவிநாயகர்- வெள்ளை விநாயகர்

     சம்பந்தர் பாடல் பெற்றது.

தலம் - 44