பக்கம் எண் :

திருமுறைத்தலங்கள் 709


                                            - ‘தாம்பேரா
     வீட்டிலன் பரானந்த மேவச் செயுங்கொள்ளிக்
     காட்டிலமர்ந்த என்கண் காட்சியே’         (அருட்பா)


அஞ்சல் முகவரி:-

     அ/மி. அக்கினீஸ்வரர் திருக்கோயில்
     திருக்கொள்ளிக்காடு - கீராலத்தூர் அஞ்சல் - 610 205
     (வழி) திருநெல்லிக்காவல் - திருத்துறைப்பூண்டி வட்டம்
     திருவாரூர் மாவட்டம்.

233/116. திருத்தெங்கூர்

திருத்தங்கூர்

     சோழநாட்டு (தென்கரை)த் தலம்.

     மக்கள் வழக்கில் திருத்தங்கூர் என்றும் வழங்கப்படுகிறது. திருவாரூர்-
திருத்துறைப்பூண்டி சாலையில் ‘நெல்லிக்கா’ என்று கைகாட்டி உள்ள
திசையில் திரும்பி, திருநெல்லிக்கா சென்று, அங்கிருந்து 2 கி.மீ. உள்ள
இத்தலத்தையடையலாம். தனிப் பேருந்தில் செல்வோர், கோயில்வரை
செல்லலாம். பொதுப் பேருந்துப் பயணம் மேற்கொள்வோர், ‘நெல்லிக்கா’
கைகாட்டி உள்ள இடத்தில் இறங்கி நடந்து வரவேண்டும். ஊழிக்காலத்தில்
கடல் பொங்கியெழுந்து அதனால் உலகம் கொள்ளப்பட்டும், இத்தலத்தில்
மட்டுமே தெளிந்த நீர் தேங்கி நின்றதால் ‘தேங்கூர்’ என்று பெயர் பெற்றது
என்பது தலபுராணச் செய்தி. தென்னை வளம்பெற்ற ஊராதலின் ‘தெங்கூர்’
எனப் பெயர் பெற்றது என்றும் கூறுவர்.

     இலக்குமியும் நவக்கிரகங்களும் வழிபட்ட தலம்.
     இறைவன் - ரஜதகீரிஸ்வரர், வெள்ளிமலைநாதர்.
     இறைவி - பிருகந்நாயகி, பெரியநாயகி.
     தலமரம் - தென்னை
     தீர்த்தம் - சிவகங்கை.

     சம்பந்தர் பாடல் பெற்றது.

     இராசகோபுரமில்லை. கொடிமரமில்லை - கொடிமரத்து விநாயகர்
உள்ளார். நந்தி பலிபீடங்கள் உள்ளன. வலப்பால் அம்பாள் சந்நிதி உள்ளது.