பக்கம் எண் :

880 திருமுறைத்தலங்கள்


6. தோணிபுரம்

சீர்காழி

     தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில்
உள்ளது.

                          
பாடல்

     “பாசவேரறுக்கும் பழம்பொருள்தன்னைப்
          பற்றுமா றடியேனற் கருளிப்
     பூசனை உகந்தென் சிந்தையுட் புகுந்து
          பூங்கழல் காட்டிய பொருளே
     தேசுடை விளக்கே செழுஞ்சுடர்மூர்த்தீ
          செல்வமே சிவபெருமானே
     ஈசனே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
          எங்கெழுந்தருளுவதினியே.” (பிடித்த பத்து-திருவாசகம்)

7. திருவாரூர்

     தலவிளக்கம் திருமுறைத்தலங்களின் வரிசையில் உரிய பக்கத்தில்
உள்ளது.

                        
 பாடல்

     சடையானே தழலாடீ தயங்கு மூவிலைச்சூலப்
     படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை
     விடையானே விரிபொழல் சூழ்பெருந்துறையாய் அடியேன் நான்
     உடையானே உனையல்லாது உறுதுணைமற்று அறியேனே.

     உற்றாரையான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
     கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனி அமையும்
     குற்றாலத்து அமர்ந்து உரையும்கூத்தா உன் குரைகழற்கே
     கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே.
                                (திருவாசகம் - திருப்புலம்பல்)