பக்கம் எண் :

892 திருமுறைத்தலங்கள்


    “மங்கை யோடிருந்து யோகு செய்வானை
          வளர் இளந்திங்களை முடிமேல்
     கங்கையோடு அணியும் கடவுளைக் கங்கை
          கொண்ட சோளேச்சரத்தானை
     அங்கையோ டேந்திப் பலிதிரி கருவூர்
          அறைந்த சொல் மாலையால் ஆழிச்
     செங்கையோடு உலகில் அரசு வீற்றிருந்து
          திளைப்பதும் சிவனருட் கடலே.” (கருவூர்த்தேவர்)

அஞ்சல் முகவரி :-

     அ/மி. கங்கை கொண்ட சோழேஸ்வரர் திருக்கோயில்
     கங்கைகொண்ட சோழபுரம் & Post - 612 901.
     உடையார்பாளையம் வட்டம் - திருச்சி மாவட்டம்.

3. களந்தை ஆதித்தேச்சரம்

களப்பால் - கோயில் களப்பால்

     தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிசைப்பாத் தலம். மக்கள் வழக்கில்
களப்பால் என்றும் கோயில் களப்பால் என்றும் வழங்குகிறது. ஊர்: களப்பால்
- கோயில் : ஆதித்தேச்சரம்.

     களப்பாளர் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்த ஊராதலின்
இப்பெயர் பெற்றது. இது மருவி களந்தை என்றாயிற்று. இக்கோயில் விசயாலய
சோழனின் மகன் ஆதித்த சோழன் (கி.பி. 850-890) கட்டுவித்தது. எனவே
ஆதித்தேச்சரம் என்று பெயர் பெற்றது. முள்ளியாற்றின் கரையில் அமைந்த
தலம். இங்கு அழகிய நாதசுவாமி கோயில், கயிலாயநாதர் கோயில்,
ஆனைகாத்த பெருமாள் கோயில் என மூன்று கோயில்கள் உள்ளன.
இவற்றுள் அழகியநாதசுவாமி திருக்கோயிலே திருவிசைப்பா பாடல்
பெற்றதாகும்.

     (அழகியநாதசுவாமி கோயிலில் உள்ள பாண்டிய மன்னன் குலசேகரனின்
கல்வெட்டு இத்தலத்து இறைவனை ‘களப்பால் உடையார்’
ஆதித்தேச்சரமுடையார் என்று குறிப்பிடுகிறது. களப்பால் என்பது களந்தை
என்று மருவிவரும். ஆதலின் இதுவே திருவிசைப்பா