பக்கம் எண் :

900 திருமுறைத்தலங்கள்


6. திரைலோக்கிய சுந்தரம்

திருலோக்கி

     தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவிசைப்பாத்தலம்.

     மக்கள் வழக்கில் ‘திருலோக்கி’ என்று வழங்குகிறது.

     (1) திருப்பனந்தாளிலிருந்து ஆடுதுறை சாலையில் 3 கி.மீ. சென்று
இவ்வூரையடையலாம்.

     (2) திருப்பனந்தாளிலிருந்து, கும்பகோணம் - பூம்புகார்ச் சாலையில்
கோட்டூர் என்று வழங்கும் ‘துகிலி’ ஊரையடைந்து, அதைத் தாண்டி,
“திருலோக்கி 5 கி.மீ.” என்று வழிகாட்டிப் பலகையுள்ள இடத்தில்
(இடப்புறமாகத்) திரும்பிச் சென்றால் கீழசூரியமூலை, வழியாக இவ்வூரை
யடையலாம். ஒருவழிப்பாதை, பேருந்து செல்லும் பாதையில் செல்லும்போது
அங்கங்கே நின்று விசாரித்துச் செல்ல வேண்டும்.

     தனிப்பேருந்தில் யாத்திரையாகச் செல்வோர், மேற்குறித்த இரு
பாதைகளில் ஏதேனும் தடங்கல்கள் உள்ளனவா, பாதை சீர்கெட்டுப் பழுதுப்
பார்க்கும் பணி நடைபெறுகிறதா என்று திருப்பனந்தாளிலேயே விசாரித்துக்
கொண்டு வசதிப்படி உரிய பாதையிற் செல்வது நல்லது. (மழைக்காலத்தில்
செல்வதற்குப் பொதுவாகச் சோழநாட்டு உட்பாதைகள் ஏற்றவையல்ல.
இப்பாதைகளும் அத்தரத்தனவே)