(பொ
- ரை) திருச்சபைக்குச் சிரசு தேவகுமாரன்.
இவ்வுலகத்திலுள்ள திருத்தொண்டரெல்லாம் அதற்கு உடல். அப்படியாக
பரிசுத்த ஐக்கியம் நிலைபெற்று நின்று தருமத்தை வளர்க்கும்.
|
வேறு
சத்தி யந்தரு
மம்பொறை தயவுகண் ணோட்டம்
சித்த சுத்திமெய்ப் பத்தியென் றித்தகு சீல
வித்த கந்திகழ் சாதுக்க ளுளரெனும் விரகால்
இத்த ராதல முளதில ரெனிலில தாமால். 5
|
(பொ
- ரை) சத்தியம், தருமம், பொறுமை, தயவு, தாட்சணியம்,
சித்தசுத்தி, மெய்ப்பக்தி என்று இப்படிப்பட்ட தகுதியான ஒழுக்கத்துக்குரிய
ஞானந்திகழுகின்ற சாதுக்கள் இருக்கின்றார்கள் என்னும் சூழ்ச்சியால்
இவ்வுலகமானது இருக்கின்றது. அவர்களில்லையேல் உலகமும் இராது.
|
பண்டு நோவையுங்
குடும்பமுங் கலம்புகப் பரவை
மண்ட லத்தைவாய் மடுத்ததே மயலறு சான்றாக்
கண்டு கேட்டறிந் தின்னமு முய்வழி கருதித்
தொண்டு பட்டிடா ருலகரி தென்கொலோ துணிவே. 6
|
(பொ
- ரை) பூர்வகாலத்தில் நோவாவும் அவன் குடும்பத்தாரும்
பேழையில் புகுந்துகொள்ள, சமுத்திரமானது இப்பூமண்டலத்தைத் தன்
வாயில் போட்டுக்கொண்டதே சாட்சியாகக் கண்டும் கேட்டும் அறிந்தும்
இன்னமும் தாங்கள் உய்யவேண்டிய வழியை நினைத்து உலகத்தார்
ஈஸ்வரனுக்குத் தொண்டு செய்கின்றார்களில்லை. இவர்களுடைய துணிவு
இருந்தவாறென்னை!
|
இனைய
தன்மைய சாதுசங் கத்தருக் கென்றும்
முனைவ னீந்தருள் சுருதியே முத்திசா தனமாம்
அனைய நூல்வழிப் படர்தலே யான்மர க்ஷணிய
நினைவு கொண்டுடன் சிந்தையாத் திசைசெயு நீர்மை. 7
|
(பொ
- ரை) இப்படிப்பட்ட தன்மையையுடைய சாது
சங்கத்தவருக்குக் கடவுள் கொடுத்தருளிய சுருதியே எப்போதும்
முத்திசாதனமாம். அப்படிப்பட்ட நூல் முறைமையில் செல்லுதலே
ஆத்தும இரக்ஷணிய நினைவுகொண்டு உடனே மானத யாத்திரைசெய்யும்
தன்மையாம்.
|
ஆய
வித்தகு சிந்தையாத் திரைபெரி தாற்றி
நாயகன் கிறிஸ் தியேசுவுக் கன்புசெய் நண்பன்
தூய ஜீவிய நடைகடைப் பிடித்தவோர் சுகிர்தன்
மாயி ரும்புவி மயக்கறு மாண்புடை ஞானி. 8
|
|