பக்கம் எண் :

9

     (பொ - ரை) சுமத்தற்கரிய சுமை நீங்குபடலம், துயிலுணர்த்து
படலம், அமார்க்கப்படலம், ஜீவபுஷ்கரிணிப்படலம், உபாதிமலைப் படலம்,
விரும்பத்தகுந்த சம்பாஷணைப்படலம், இரட்சிப்பு உலகத்தில் தோன்றிய
விதத்தைச் சொல்லுகின்ற இரக்ஷணிய சரிதப்படலம், விசிராந்திப்படலம்,
காட்சிப்படலம், வனம்புகுபடலம், அழிம்பன்றோல்விப் படலம், நெருங்குந்
தன்மைத்தான மரணச்சூழல் இறுத்தபடலம், நிதானி நட்புக்கூடுபடலம்,
நல்நெறியில்லாத அலப்பனை வரைந்தபடலம், ஞானாசிரியனைக்
கண்ணுற்றபடலம், பக்கத்திலேயிருந்த மாயாபுரிப்படலம், நகர்புகுபடலம்,
ஆத்மீகரக்ஷிப்பை வகுத்துரைத்தலாகிய ரக்ஷணிய நவநீதப்படலம்,
சிறைப்படுபடலம்.

 
   

நற்றவனி தானிகதி நன்னம் பிக்கை
     நல்வழிவே தியன்மீட்சி பொற்சு ரங்கம்
செற்றமுறு விடாதகண்டச் சிறையா னந்தச்
     சிகரிவிசு வாசவியல் திமிர வண்ணன்
குற்றமிகு சோகநில மறிவீ னற்குக்
     கூறுமுறை நிலைகேடன் றரும க்ஷேத்ரம்
முற்றுமிக பரசந்தி சுவர்க்கப் பேறு
     முறைவைப்பா நிகழ்படல நாற்பத் தேழே. 3

     (பொ - ரை) நல்லதவத்தை யுடையவனாகிய நிதானி
கதிகூடுபடலம், நன்னம்பிக்கை நன்னெறி பிடித்தபடலம், கிறிஸ்தவன்
கதிவழி கூடிய படலம், பொற்சுரங்கப்படலம், கோபத்தையுடைய
விடாதகண்டப் படலம், ஆனந்த சைலப்படலம், விசுவாசவிளக்கப்படலம்,
கார்வண்ணப்படலம், குற்றம் மிகுந்த சோகபூமிப்படலம், அறிவீனவர்ச்சிதப்
படலம், நிலைகேடனாதியர் விவரணப்படலம், தர்மக்ஷேத்ரப்படலம்,
முற்றுப்பெறுவதாகிய இகபரசந்திப்படலம், சுவர்க்காரோகணப்படலம்
என்னும் இந்த முறைவைப்பாக நிகழ்கின்ற படலங்கள் நாற்பத்தேழே
என்க.

  பதிகம் முற்றிற்று.
 _________