சீறாப்புராணம்
மூலமும்
- பொழிப்புரையும்
முதற்பாகம்
விலாதத்துக்
காண்டம்
காப்பு
அறுசீர்க்கழி நெடிலடி
யாசிரிய விருத்தம்
திருவுருவா
யுணருருவா யறிவினொடு
தெளிவிடத்துஞ்
சிந்தி யாத
அருவுருவா
யுருவுருவா யகம்புறமுந்
தன்னியலா
வடங்கா வின்பத்
தொருவுருவா
யின்மையினி லுண்மையினைத்
தோற்றுவிக்கு
மொளியா யாவு
மருவுருவாய்
வளர்காவன் முதலவனைப்
பணிந்துள்ளி
வாழ்த்து வாமே.
பதவுரை
திருஉரு ஆய் - சிறப்பினையுடைய
பொருளாய், உணர் உரு ஆய் - கருத்தா னுணரு முருவாய், அறிவின் ஓடு தெளிவு இடத்தும் சிந்தியாத அரு
உரு ஆய் - யாவ னொருவன் அறிவானே தெளிவு பெற்ற விடத்தும் இத்தன்மைத் தாமென நினைக்கப்படாத
அருவமே யுருவமாய், உருஉரு ஆய் - வெளியுரு வல்லாத உள்ளுருவாய், அகம்புறமும் தன் இயல் ஆ - அகத்தின்
கண்ணும் புறத்தின் கண்ணுந் தன்னியலே யன்றிப் பிற விய வில்லதாக, அடங்கா இன்பத்து ஒரு
உருஆய் - அளவையு ளடங்காத பேரின்பத் தானாய ஒப்பற்றவுருவமாய், இன்மையினில் உண்மையினைத் தோற்றுவிக்கும்
ஒளிஆய் - இல்லாமையி லிருந்து உள்ளதாந் தன்மையைத் தோன்றச் செய்த பேரொளியாய், யாவும்
மருவு உருஆய் - சிருட்டிகள் யாவுமருவாநிற்கு முருவமாய், வளர் - உயர்ந்த, காவல் முதலவனை - காவல்
பாட்டினை யுடைய ஆதி நாயகனை, (அல்லாகுத்த ஆலாவை என்றபடி) பணிந்து உள்ளி வாழ்த்துவாம் -
யாம் வணங்கிக் கருதித் துதிப்பாம்.
|