முதற்பாகம்
மதிகரித்தவர்களை,
வாய் ஆர வைத்தபேர் - வாயிற் பொருந்தும்படி வைத்துத் துதித்தோர்கள், வாழ்வார் சுவர்க்கம்பதியே
- சுவர்க்கலோகத்தில் வாழ்வார்கள்.
பொழிப்புரை
மேகக்குடையை மேலே கவிக்கும் வண்ணம் பிரயத்தனத்தைப்
பெற்ற நயினாரான நமது நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள் கீர்த்தியாய்த்
தோற்றமாவதைத் தேவர்களாகிய மலாயிக்கத்து மார்கள் கூற அதைப் பேறாக விளக்கஞ்செய்யும் அறிஞர்களும்
ஆராய்வில் மிகுந்த கீர்த்தியையுடைய இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களுமான விசேட
மதிகரித் தவர்களை, வாயிற் பொருந்தும்படி வைத்துத் துதித்தோர்கள் சுவர்க்கலோகத்தில்
வாழ்வார்கள்.
வேறு
9. புரசைக் கடக்கரிக ணிரைதட் டறக்குபிரர்
புவியைப்
படக்க டவியே
சரகுற்ற நற்பதவி
வழியிற் புகுத்தியுயர்
தலைமைக்கு வைத்த பெரியோர்
பிரசத்
துளித்திவலை சிதறிக் கிடக்குமிரு
பிணையற்
புயத்து நயினா
ரரசுக்கு வைத்தநெறி
வரிசைக்கு மிக்கதுரை
யபுபக் கரைப்புக லுவாம்.
9
பதவுரை
புரசை கடம்கரிகள் - கழுத்தணியின் கயிற்றையும்
மதங்களையுமுடைய யானைகளினது, நிரை தட்டு அற - படை வகுப்புகளின் நிலைமையான தறும்படி, குபிரர்
புடவியை - காபிர்களின் பூமிகளை, படகடவியே - முட்டும் வண்ணம் பிரயோகித்து, சரகு உற்றநல்
பதவி - ஷறகில் பொருந்திய நல்ல கதியினது, வழியில் புகுத்தி - சன்மார்க்கத்தில் அவர்களை
நுழைவித்து, உயர்தலைமைக்கு - மேலான தலைமைத் தனத்திற்கு, வைத்த பெரியோர் - வைத்த
பெருமையையுடையவரும், பிரசம் துளி திவலை - தேன் மாரியினது துளிகள், சிதறிகிடக்கும் -
சிதறுதலுற்றுக் கிடக்கும், இரு பிணையல் - இரு மாலைகளைக் கொண்ட, புயத்து நயினார் - தோள்களை
யுடையவர்களான நாயகம் நபிமுகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்லமவர்கள், அரசுக்கு வைத்த
- அரசுக்கு வைக்கப் பெற்ற; நெறி வரிசைக்கு - ஒழுங்கினது சங்கைக்கு, மிக்க துரை - மிகுந்த
|