இரண்டாம் பாகம்
ஓநாய் பேசிய படலம்
கலிவிருத்தம்
2965.
நலனுறு மக்கமா நகரைச்
சுற்றிய
மலைகளி னொருவரை யடவி
யின்வயி
னிலைகொளாப் பறழொடு நிறைந்த
புள்ளிமான்
கலையொடுஞ் செறிந்துபுற் கறித்து
நின்றதே.
1
(இ-ள்) நன்மை பொருந்திய
திரு மக்கமா நகரத்தை வளைந்த மலைகளில் ஒரு மலையினது காட்டினிடத்துப் பொலிந்த புள்ளிகளை யுடைய
பெண்மான்கள் தரித்து நிற்றலைப் பெறாத தமது குட்டிகளுடனும் ஆண் மான்களுடனும் நெருங்கிப் புற்களைப்
பற்களினால் மென்று மேய்ந்து கொண்டு நின்றன.
2966.
வள்ளுகிர் முடங்குவால் வளைப்பற்
றூங்குர
னுள்ளொடுங் ககட்டவோ நாயொன்
றொண்ணுனை
முள்ளரைக் கானிடைக் கிடந்து
மூரிவெம்
புள்ளிமெய்ப் பிணையினை நோக்கிப்
போனதால்.
2
(இ-ள்) அவ்வாறு நிற்க,
கூர்மை தங்கிய நகங்களையும், சுருண்ட வாலையும், வளைந்த பற்களையும், தூங்குகின்ற மார்பையும், உள்ளே
ஒடுங்கிய வயிற்றையு முடைய ஓ ரோநா யானது ஒள்ளிய நுனியைக் கொண்ட முட்கள் தங்கிய இடையையுடைய
காட்டின் கண் ணிருந்த படி யிருந்து பெருமை பொருந்திய புள்ளிகளினது சரீரத்தை யுடைய வெவ்விய அந்த
மான்களைப் பார்த்து வந்தது.
2967.
கல்லிரு புறத்தினுஞ் சிதறக்
கால்வறீஇ
வல்லுர னிலம்பட வளைந்து சென்னிதாழ்த்
தெல்லையில் பசியொடு மெதிர
மானினம்
பல்பல திசையினும் படர்ந்து
போயின.
3
(இ-ள்) கற்க ளானவை இரு
மருங்கிலும் சிதறும் வண்ணம், காற்களாற் வறுவி வலிமையை யுடைய மார்பானது பூமியிற் படிய வளைந்து
தலையைத் தாழ்த்திக் கணக்கற்ற பசியோடும் அந் நாயானது அவ்வாறு வந்து எதிர்ப்பட, அந்த
மான் கூட்டங்கள் பற்பல திசைகளிலும் பரவிச் சென்றன.
2968.
பிணைக்குலந் திசைதொறுஞ்
சிதறிப் போதுற
வணித்ததென் றொருபிணை
யதனை நோக்கிவெண்
மணிக்கதி ரெனுமுகிர் நிலத்தில்
வவ்வுறத்
துணித்துணு மம்மரிற் றொடர்ந்து
போயதே.
4
|