பக்கம் எண் :

சீறாப்புராணம்

1201


இரண்டாம் பாகம்
 

சீபுல் பகுறுப் படலம்

 

கலிவிருத்தம்

 

3261. இறையவன் றூதரு மியார்க ணால்வரு

     மறைவழி பெருக்கிய மன்ன ரியாவரு

     நிறைதர விருக்குமந் நாளி னேரல

     ருறைபதி யிடத்திருந் தொற்ற ருற்றனர்.

1

      (இ-ள்) யாவற்றிற்குங் கடவுளான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் றசூ லாகிய நாயகம் நபிகட் பெருமானார் நபி காத்திமுல் அன்பியா ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களும் அபூபக்கர் சித்தீகு றலி யல்லாகு அன்கு, உமறு கத்தாபு றலி யல்லாகு அன்கு, உதுமா னிபுனு அப்பான் றலியல்லாகு அன்கு, அலி யிபுனு அபீத் தாலிபு றலி யல்லாகு அன்கு, ஆகிய நான்கு மந்திரிமார்களும் புறுக்கானுல் அலீ மென்னும் வேதத்தினது தீனுல் இஸ்லா மென்னும் மார்க்கத்தைப் பெருகச் செய்த அரசர்களான அசுஹாபிமார்களனைவரும் நிறைவாக வுறைகின்ற அந்தச் சமயத்தில், சத்துராதிகளான காபிர்கள் வசிக்கின்ற ஊரின் கண்ணிருந்து சில தூதுவர்கள் வந்து சேர்ந்தார்கள்.

 

3262. கடற்கரை சீபுல்ப குறுவென் றோதிய

     விடத்தினி லபூசகு லுடன்முன் னூறிய

     லடற்பரி கபடமா யடைந்த தின்றென

     மடற்றுளைச் செவிப்புக வாழ்த்திச் சொல்லினார்.

2

      (இ-ள்) அவ்வாறு வந்து சமுத்திர தீரமாகிய சீபுல் பகுறு வென்று சொல்லப்பட்ட தானத்தின் கண் இன்றையத் தினம் வஞ்சகமாக அபூஜகி லென்பவனோடு நடையினது வலிமையைக் கொட முன்னூறென்னு மிலக்கத்தைப் பெற்ற ஓர் குதிரைப் படையானது வந்து சேர்ந்த தென்று மடலைக் கொண்ட துவாரத்தையுடைய அவர்களின் காதுகளில் நுழையும்படி துதித்துச் சொன்னார்கள்.

 

3263. ஒற்றர்க ளுரைத்தவை யுணர்ந்து தீனிலை

     வெற்றிசேர் வேந்தருக் குரைத்து வேறுகொள்

     பற்றல ரெனுமிருள் பருகும் வெங்கதிர்க்

     கொற்றவ ரடலமு சாவைக் கூவினார்.

3

      (இ-ள்) தூதர்களாகிய அவர்கள் அவ்வாறு சொல்லிய வார்த்தைகளை நாயகம் நபி முகம்மது முஸ்தபா றசூல்