இரண்டாம் பாகம்
வாயினும் உன்னா நிற்கும் உங்களது
மனத்தின் கண் பொருந்திக் கிருபையான உத்திரவு செய்யுங்க ளென்று கேட்க, அதற்கு இராஜரான நாயகம்
நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லலாகு அலைகி வசல்ல மவர்கள் அழகிய தங்களின்
மனதி னிடத்துச் சம்மதமுற்றார்கள்.
3335.
அருமறை முகம்மதி னம்பொற்
றாளிணை
யிருவிழி வைத்துமுத் தாடி யாவர்க்கும்
பிரியமுற் றொருசலா மோதிப்
பெட்புடன்
வரிசைபெற் றறபிவாழ் பதியிற்
போயினான்.
40
(இ-ள்) அவ்விதஞ் சம்மத
முற, அந்த அறபி யானவன் அருமையான புறுக்கானுல் மஜீ தென்னும் வேதத்தை யுடைய நாயகம் ஹாமிது அஹ்மது
முஹம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களில் அழகிய பொன் போன்ற இரு திருவடிகளிலும்
தனது இரு நேத்திரங்களையும் வைத்து முத்தமிட்டு அங்கிருந்த அனைவர்க்கும் பிரிய முற்று ழுஅஸ்ஸலாமு
அலைக்குழு மென்று ஒப்பற்ற சலாமைச் சொல்லி நல்ல சீர்களைப் பெற்ற ஆசையோடும் தான்
வாழுகின்ற ஊரின் கண் போய்ச் சேர்ந்தான்.
3336.
வழிபடு மவனைநல் வழியி
லாக்கிமேற்
சுழிபடு புரவியும் படையுந்
துன்னவே
யழிபடாப் பெரும்புக ழரசர்
கேசரி
பழிபடா திருந்துவாழ் பதியை
நண்ணினார்.
41
(இ-ள்) கெடாத பெரிய
கீர்த்தியை யுடைய இராஜர்களாகிய யானைகளுக்குச் சிங்கமான நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி
காத்திமுல் அன்பியா ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல
மவர்கள் தங்களுக்குக் கீழ்ப்படிந்த அந்த அறபியை நல்ல சன்மார்க்கத்திலாகும்படி செய்து மேலான
சுழிகளைக் கொண்ட குதிரைகளுஞ் சேனைகளும் தங்களை நெருங்கும் வண்ணங் களங்க முறாமல் தாங்க
ளிருந்து வாழுகின்ற திரு மதீனமா நகரத்தில் வந்து சேர்ந்தார்கள்.
|