பக்கம் எண் :

சீறாப்புராணம்

1323


இரண்டாம் பாகம்
 

     புரத்தினுற் றவர்க்குந் தனித்தனி யுரைத்துப்

          புதியவன் றனைப்புகழ்ந் தேத்திக்

     கரத்தபுக் களிறப் பாசெனு முரவோர்

          கடிகொடம் பதியிடை புக்கார்.

255

      (இ-ள்) அவ்வாறிருந்த தும்பிக்கையையுடைய பெரிய யானையை நிகர்த்த அப்பாசு றலியல்லாகு அன்கு என்று சொல்லும் அறிவையுடையோர்கள் வரத்தினால் மேன்மைப்பட்ட கஃபத்துலாவினது ஆபுசம்மென்று சொல்லுங் கிணற்றின் தண்ணீரை யாவர்களுக்குங் கொடுக்கின்ற பொறுப்புக்குச் சுதந்திரரானதனாலும் நீங்காது பழமையாயிருந்து வரிசையாக வருவதனாலும் நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்கும் அந்தத் திரு மதீனமா நகரத்தி லிருந்த மற்றவர்களுக்கும் தனித்தனியாகக் கூறிப் புதிய ஆலத்தையுடையவனான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவைப் புகழ்ந்து வணங்கிக் காவலைக் கொண்ட தங்களது பட்டினமாகிய திரு மக்கமா நகரத்தின்கண் போய்ச் சேர்ந்தார்கள்.

 

3607. முதலவன் விதித்த விறமலா னோன்பு

          முடிவினி லியாவரு மறிய

     அதிசயம் பிறப்பப் பித்துறாப் பறுலென்

          றாயத்தும் நபிக்கிறங் கியதான்

     மதிவல ரெவரு மவ்வழி முடித்து

          மகிழ்ந்தனர் தீனெனும் பயிரும்

     பதிவுபெற் றிருந்து தழைத்தன செல்வம்

          படர்ந்தினி தோங்கின வன்றே.

256

      (இ-ள்) அவர் அவ்வாறு போக, யாவற்றிற்கும், முதன்மையான அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவானவன் கற்பித்த றமலான் மாதத்தினது நோன்பி னிறுதியில் அனைவருமுணரவும், அற்புதங்களுண்டாகவும், பித்துறாத் தொழுகை தொழுவது பறுலென்று நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி செய்யிதுல் முறுசலீன் ஹபீபு றப்பில் ஆலமீன் முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்களுக்கு ஆயத்தாகிய வேதவசனமு மிறங்கினதால் அறிவினால் வல்லவர்களான சஹாபாக்கள் முதல் யாவர்களும் அப்பிரகாரம் நிறைவேற்றிச் சந்தோஷித்தார்கள். தீனுல் இஸ்லா மென்று சொல்லும் பயிரும் எவ்விடத்தும் இனிமையோடு பதிவு பெற்று றைந்து வளர்ந்தது. செல்வமும் பரவி யோங்கிற்று.