பக்கம் எண் :

சீறாப்புராணம்

1342


இரண்டாம் பாகம்
 

      (இ-ள்) நல்ல மேன்மையையுடைய கலிமாவாகிய ழுலாயிலாஹ இல்லல்லாகு முஹம்மதுர் றசூலுல்லாஹிழு யென்று சொல்லும் நாமத்தை நாவினிடத்து நிலை நிறுத்துகின்ற அசுஹாபிமார்கள் சொல்லுகின்ற தீனுல் இஸ்லாமென்னும் மெய்ம் மார்க்கத்தைக் குற்றமாக்கித் தூஷணித்து விரோதமாக இராஜராகிய நபிகட் பெருமானே! உங்களது பெயரையும் நீங்கள் சொல்லுகின்ற சத்திய வசனங்களையும் மதிக்காமல் அன்பின்றிச் சொல்லுதற்கரிய பொல்லாங்கான செய்கைகளை அதிகமாகக் கொண்டு இருக்கின்றார்களென்று கூறினார்.

 

3668. புவியிடந் திரிந்து நாளும் புகலுவோ ருரைத்த மாற்றஞ்

     செவிவழி புகுத லோடுஞ் செவ்விய ரிறசூ லுல்லா

     இபுனும்மி மக்குத்தூ மென்னு மிளவலை நகரி னாட்டிக்

     கவனவெம் பரியுந் தானைக் கணத்தொடுங் கடிது போனார்.

4

      (இ-ள்) இப்பூமியின் கண்ணுள்ள பல தேயங்களிலு மலைந்து ஆங்காங்குள்ள சமாச்சாரங்களைப் பிரதி தினமும் வந்து சொல்லப் பட்டவரான அத்தூதுவர் அவ்வாறு கூறிய வார்த்தைகளானவை காதுகளின் மார்க்கமாய் உட் சென்றவுடன் அல்லாகு சுபுகானகு வத்த ஆலாவின் தூதராகிய அழகையுடைய நமது நாயகம் நபிகட் பெருமானார் நபி முகம்மது முஸ்தபா றசூல் சல்லல்லாகு அலைகி வசல்ல மவர்கள் இபுனும்மி மகுதூம் றலியல்லாகு அன்கு என்று சொல்லும் இளம்பிராயத்தை யுடையவர்களை அந்தத் திரு மதீனமா நகரத்தில் யாவர்க்குந் தலைமையாக நிறுத்தி விட்டு விரைந்த நடையையுடைய வெவ்விய குதிரைகளோடும் சேனைகளது கூட்டத்தோடும் வேகத்தில் அந்தக் குதிரியென்னு மூரை நாடிச் சென்றார்கள்.

 

3669. மதிதவழ் சிகரக் கோடி வரைபல கடந்து நன்னீர்

     நதிசில கடந்து மாறா நள்ளிருட் கான நீந்திக்

     கதிரவன் கதிரி னாலெண் காவதங் கடந்து வல்லே

     குதிரியென் றோங்குஞ் செல்வக் கொழுநக ரடுப்பப் புக்கார்.

5

      (இ-ள்) அவ்விதஞ் சென்ற அவர்கள் சந்திரனானவன் தவழ்ந்து செல்லுகின்ற கொடுமுடியினது முனையையுடைய பலமலைகளைத் தாண்டி நல்ல ஜலத்தையுடைய சில ஆறுகளைத் தொலைத்து நீங்காத மிகுத்த அந்தகாரத்தை யுடைய காடுகளைக்கடந்து சூரியனது பிரகாசத்தினால் எட்டுக் காதவழி தூரம் விரைவிற் போக்கிக் குதிரியென ஓங்கா நிற்கும் வளப்பத்தைக் கொண்ட செழிய ஊருக்குச் சமீபமாகப் போய்ச் சேர்ந்தார்கள்.